LEO: "நீ பாத்த வேலைக்கு..?" லோகேஷ் கனகராஜை பங்கமாய் கலாய்த்த நடிகர் விஜய்..! லியோ படப்பிடிப்பில் நடந்தது என்ன?
இயக்குனர் லோகேஷ் கனகராஜை லீயோ படபிடிப்புத் தளத்தில் கலாய்த்துள்ளார் நடிகர் விஜய்.என்ன காரணத்திற்காக என்று ஒரு சின்ன குட்டி ஸ்டோரியை பார்த்துவிடலாம்
டைமிங்க பார்த்து கலாய்த்து விடுவதில் நடிகர் விஜய் கெட்டிக்காரர்.அந்த மாதிரி ஒரு செம கலாய் ஒன்றை தனது இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு கொடுத்து பங்கம் செய்துள்ளார் நடிகர் விஜய்.
லோகேஷிற்கு நோ சொன்ன சாந்தனு:
சாந்தனு நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இராவணக் கோட்டம். இந்தப் படத்தின் ட்ரெய்லரில் வெளியானது முதல் படம் ரிலீஸாவது வரை நிறைய எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. அதனால் இராவணக் கோட்டம் திரைப்படம் வெளியாகுமா? ஆகாதா? என்கிற குழப்பம் நீடித்து வந்த காரணத்தினால் படக்குழுவினர் மிகுந்த அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்கள். படத்தில் கதாநாயகனாக நடித்த சாந்தனு இந்த மாதிரியான குழப்பத்தில் இருந்த சமயத்தில் தான் அவருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. சாந்தனுவை தனது வீட்டிற்கு டின்னர் சாப்பிட அழைத்திருக்கிறார் லோகேஷ். ஆனால் சாந்தனு தனது படம் குறித்தான டென்ஷனாக இருப்பதாகக் கூறி இன்னொரு நாள் வருவதாக தெரிவித்துள்ளார்.
இராவணக்கோட்டம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சில நாட்கள் முன்பு நடிகர் சாந்தனு லியோ படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று லோகேஷ் மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவரையும் சந்தித்துள்ளார். அப்போது லோகேஷ் விஜயிடம் சாந்தனுவை பற்றி புகார் தெரிவிக்கும் வகையில் ‘ அன்னோவ் இவன் ரொம்ப ஓவரா பன்றான். வீட்டுக்கு வாடானா வரமாட்றான்’ என தெரிவித்துள்ளார்.
கலாய்த்த விஜய்:
இதுதான் நேரம் என்பதுபோல் நடிகர் விஜய் லோகேஷிற்கு மரண கலாய் ஒன்றை கொடுத்திருக்கிறார். ”ஆமா நீ பன்ன வேலைக்கு.." என லோகேஷை குத்திகாட்டியுள்ளார் விஜய். இது எப்படி செம கலாய் என்று கேட்கிறீர்களா..? இதற்கு இன்னும் கொஞ்சம் பின்னாடி இவர்கள் மூவரும் மாஸ்டர் படத்தில் சேர்ந்து வேலைசெய்த இடத்திற்கு போவோம்
மாஸ்டர் படத்தில் நீங்கள் சாந்தனுவை பார்த்தீர்களா..? சரி எவ்வளவு நேரம் பார்த்தீர்கள். மிகச்சரியாக சொன்னால் 12 நிமிடம் படத்தில் வந்துபோயிருக்கிறார் சாந்தனு. ஆனால் இந்த 12 நிமிஷத்திற்கு எத்தனை நாள் தெரியுமா? அவர் படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறார் தெரியுமா? மொத்தம் 30 நாள். பின் இந்த 30 நாளில் சாந்தனு அவருக்கென்று தனியாக ஒரு பாடல், நடிகர் விஜயுடன் சேர்ந்து இருவரும் வில்லன்களை அடிக்கும் சண்டைக் காட்சிகள், பாத்ரூம் சுவர் ஏறி குதித்து கெளரியை காப்பாற்றும் காட்சி ஆகிய அனைத்தையும் நடித்து முடித்து படம் வெளியாவத்ற்கு காத்திருந்திருக்கிறார்.
பாரமே குறைஞ்சுடுச்சு:
ஆனால் அவர் படத்தில் அவர் நடித்த பெரும்பாலான் காட்சிகளை வெட்டிவிட்டிருக்கிறார் லோகேஷ்.மாஸ்டர் படம் வெளியானபோது தனது வருத்தத்தை வீடியோவில் தெரிவித்திருந்தார் சாந்தனு. சாந்தனுவின் கடுப்பை மிகச் சரியாக புரிந்துகொண்டது விஜய்தான். அதனால் தான் சரியான நேரம் பார்த்து இந்த சேட்டையை செய்திருக்கிறார். இந்த தகவல்களை சாந்தனு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றில் பகிர்ந்துகொண்டார். ’என் மனசுல இருந்த பாரமே இப்பதான் கொறஞ்சிடுக்கு ’ என்று சொல்லும் சாந்தனுவின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறதா.