![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
LEO: 'நா ரெடிதான்' பாடல் முடிந்ததும் பெரிய செய்க இருக்கு.. பாடலாசிரியர் விஷ்ணு சொல்லும் குட்டி ஸ்டோரி
லியோ படம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு சின்னத் தகவலாக இருந்தாலும் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு ஒரு தகவல் அளித்துள்ளார்.
![LEO: 'நா ரெடிதான்' பாடல் முடிந்ததும் பெரிய செய்க இருக்கு.. பாடலாசிரியர் விஷ்ணு சொல்லும் குட்டி ஸ்டோரி Actor Vijay Leo movie naa ready song writer vishnu shares intersting facts about that song LEO: 'நா ரெடிதான்' பாடல் முடிந்ததும் பெரிய செய்க இருக்கு.. பாடலாசிரியர் விஷ்ணு சொல்லும் குட்டி ஸ்டோரி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/86c9d1ad498f4cf5efd2f6ab2eb26fe71687509200042572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் வெளியாகியுள்ள நிலையில் நா ரெடி பாடலின் பாடலாசிரியரான விஷ்ணு தற்போது லியோ படம் குறித்த சுவாரஸ்யமானத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பாடலாசிரியர் விஷ்ணு:
லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு. மாஸ்டர் படத்தில் பொளக்கட்டும் பற பற , போனா போகட்டும் ஆகியப்பாடலையும் விக்ரம் திரைப்படத்தில் பத்தல பத்தல பாடலையும் எழுதியவர் விஷ்ணு. தற்போது லியோ திரைப்படத்தில் நான் ரெடி பாடலை எழுதியுள்ள விஷ்ணு அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் லியோ படத்தைக் குறித்து பகிர்ந்துகொண்ட தகவல்கள் படத்தின் மீதான ஆர்வத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தெறி பேபி
நான் ரெடி பாடல் உருவான அனுபவத்தைப் பற்றி கேட்டுக்கொண்டபோது அதற்கு பதிலளித்த விஷ்ணு “லோகேஷ் கனகராஜ் என்னிடம் பாட்டுக்கான சிட்டுவேஷனைக் கொடுத்துவிட்டு எனக்கு பிடித்தமாதிரி எழுதச் சொன்னார். நான் பாடலை எழுதிமுடித்துவிட்டு லோகேஷ் அண்ணாவிடம் காட்டினேன். அவருக்கு எவ்வளவு பிடித்திருந்தாலும் அதை மிக சுருக்கமாக சொல்லிவிடுவது அவரது வழக்கம். பாடல் வரிகளை பார்த்துவிட்டு சூப்பரா இருக்கு டா என்று முடித்துவிட்டார். அடுத்ததாக அனிருத்திடம் காட்டினோம். முதல் இரண்டு வரிகளைப் படித்ததுமே தெறி பேபி என்று பாராட்டினார்.
விஜய் சாரிடம் நான் பாடலை காட்டவில்லை . ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்திற்கு செல்ல நேர்ந்தபோது அப்போது விஜய் சார் என்னிடம் பாடல் வரிகள் சிறப்பாக வந்திருந்ததாகவும் அவருக்கு பிடித்த இடங்களையும் பேசினார். பாடலின் முதல் இரண்டு வரிகள் தனக்கு ரொம்ப பிடித்திருந்ததாக அவர் கூறினார்”
பாட்டுக்கும் முன்னாடியும் செய்கதான் பாட்டு முடிஞ்சதும் செய்கதான்
லியோ படம் எப்படியான ஒரு படமாக இருக்கும் என்கிற கேள்விக்கு “ இந்தப் படத்தின் போஸ்டரில் இரண்டு விஜய் இருக்கிறார்கள். அதில் யார் லியோ என்றால் எனக்குத் தெரியாது. போஸ்டரில் கழுதைப்புலி வைக்கப்பட்டிருப்பது வெறும் விளம்பரத்திற்காக மட்டுமில்லை. படத்தில் அதை வைத்து ஒரு முக்கியமான காட்சி இருக்கிறது. நான் ரெடிதான் பாடலுக்கு முன்பும் சரி பின்பு சரி பெரிய செய்க இருக்கு” என்று படத்தின் மீது பயங்கரமான பில்ட் அப்பை ஏற்றிவிட்டுள்ளார் விஷ்ணு.
நட்சத்திர பட்டாளம்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் நடிகர் விஜய் 2வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். இதில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின் மற்றும் அர்ஜூன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)