8 Years Of Kaththi: 2ஜி அரசியல் பேசிய விஜய்...மறக்க முடியாத ஒற்றை சீன்...8 ஆண்டுகளை நிறைவு செய்த கத்தி..!
2014 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான கத்தி இன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இரட்டை வேடங்களில் விஜய் நடித்த நிலையில் கதிரேசன், ஜீவானந்தம் ஆகிய கேரக்டர்களை வேறுபடுத்தி காட்டியிருந்தார்.
நடிகர் விஜய் நடித்த கத்தி படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
2014 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா,சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘கத்தி’. விஜய்க்கு எப்பவும் மாஸ்ஸான படங்களில் நடிப்பது பிடிக்கும். அப்படியான படமாக 2012 தீபாவளிக்கு இதே கூட்டணியில் வெளியான துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல் என்னும் கதைக்களத்தை எடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்தனர். இக்கூட்டணி 2வது முறையாக இணைந்த போது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் பெரும் அரசியல் பிரச்சனைகளை சந்தித்த தலைவா, சுமாராக ஓடிய ஜில்லா என துவண்டு போன விஜய்க்கு உத்வேகம் கொடுத்தது ‘கத்தி’. அனிருத் இசையில் பாடல்கள் ஹிட்டடிக்க லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. கத்தி தான் அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஆகும். ஆனால் இலங்கை தமிழர் பிரச்சனையை காரணம் காட்டி படத்தை திரையிடக்கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியில் முதல் படத்தில் தயாரிப்பு நிறுவனம் பெயரில்லாமலேயே கத்தி களம் கண்டது.
8 years for this Blockbuster 🔥
— PrabhasVijayFC (@VijayPrabhasFC) October 22, 2022
One of the finest performances from our Thalapathy @actorvijay
Everyone's in this has been perfect.. whether be it Songs,Bgm, Performance, Direction and the negativity too 😝#8YrsOfBBKaththi #Varisu pic.twitter.com/9lU99b0ZHM
2014 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான கத்தி இன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இரட்டை வேடங்களில் விஜய் நடித்த நிலையில் கதிரேசன், ஜீவானந்தம் ஆகிய கேரக்டர்களை வேறுபடுத்தி காட்டியிருந்தார். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழ்ச்சியால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனையை கத்தி படம் மிக ஷார்ப்பாக பேசியிருந்தது. காயின் ஃபைட், கிளைமேக்ஸ் சண்டை என மாஸ் காட்டிய கத்தி படத்தின் ஒரு காட்சி பேசுபொருளாக மாறியது.
கதைப்படி விவசாயிகளின் பிரச்சனையை நகர மக்கள் அறிய வேண்டுமென சென்னைக்கு ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களுக்குள் முதியவர்களுடன் சென்று அமர்ந்து போராட்டம் செய்வார். கிட்ட தட்ட3 நாட்களுக்குப் பின் வெளியே வரும் விஜய் தலைமையிலான குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்பார். அங்கு பேசும் அரசியல் பேச்சு விஜய்யின் அரசியல் எண்ணத்தை வெளிப்படுத்தியது என சொல்லலாம்.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அந்த காட்சியில் 2ஜி விவகாரத்தையும் இழுத்திருப்பார். அதீத கற்பனை கொண்ட காட்சிகள் அமைந்தாலும் படத்தில் தண்ணீர் திருட்டு பற்றி பேசப்பட்டதை வழக்கம் போல ஏ.ஆர்.முருகதாஸ் கதை திருட்டிலும் சிக்கி சின்னாபின்னமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கத்தி படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான ட்வீட்களை கீழே காணலாம்.
அதேசமயம் துப்பாக்கியை தொடர்ந்து கத்தி படம் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்தது. 12 நாட்களில் நிகழ்த்தப்பட்ட இச்சாதனையைப் பற்றி நடிகர் விஜய் ட்விட்டரில் ரசிகரின் கேள்வி ஒன்றிற்கு கருத்து தெரிவித்தார். அதில் படம் திரையரங்குகளில் வெளியிடப்படாது என்று சொன்னார்கள். திரையரங்குகளின் ஜன்னல்களையும் உடைத்தனர். 12 மணி வரை டிக்கெட் கொடுக்கவில்லை. ரிலீஸ் ஆன 12வது நாளில் படம் 100 கோடி வசூல் செய்துள்ளது என கூறினார்.
நமக்கு இன்னொரு துப்பாக்கி கூட கெடச்சிரும் ஆனா இன்னொரு கத்தி கெடைக்குரது ரொம்ப கஷ்டம்💥❤️ #8yearsofBBKaththi #Varisu pic.twitter.com/9GRA6few5d
— ᴮᶦᵍᶦˡ Ak (@AKjaiii) October 22, 2022
சர்தார் படம் பாக்கும்போது எனக்கு கத்தி படத்தோட நியாபகம் தான் வந்திச்சி குடிக்கிற தண்ணிக்கு எவளோ கஷ்டமான்னு ரொம்ப நாள் நமக்கு அந்த படத்தோட தாக்கம் இருந்திச்சி அதே போல சர்தார் படம் பார்த்த எல்லாருக்கும் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும்👍
— RamKumarr (@ramk8060) October 22, 2022
8 years since i got to know the definition of goosebumps🔥
— Jayendra Gunalan (@JayendraGunalan) October 22, 2022
#8YrsOfBBKaththi pic.twitter.com/k91aORH1jZ
G.O.A.T FL 🔥🥵#8YrsOfBBKaththi#Varisu @actorvijay pic.twitter.com/760eOCJH1B
— 𝐕𝐈𝐒𝐇𝐖𝐀 𝐁𝐇𝐀𝐈 (@Vishwa_Bhaiii) October 22, 2022
8 Years of Blockbuster #Kaththi#8YrsOfBBKaththi #8YrsOfIndustryHitKATHTHI #Varisu @actorvijay pic.twitter.com/dQ4mBoUFnh
— team_tdok (@TeamTdok) October 22, 2022