மேலும் அறிய

Actor Vijay: 14 ஆண்டுகளுக்குப் பின் கேரளாவில் விஜய்.. ரசிகர்களால் அதிர்ந்த திருவனந்தபுரம் ஏர்போர்ட்!

The Greatest of All Time படத்துக்காக நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றுள்ளார். முன்னதாக அவர் ஷூட்டிங்கிற்காக வரவுள்ள தகவல் கசிந்ததும் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

14 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய் பட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ள நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

The Greatest of All Time

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடைசியாக “லியோ” என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் "The Greatest of All Time" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். G.O.A.T  என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், ஜெயராம், மோகன், பார்வதி நாயர், அஜய் ராஜ், கஞ்சா கருப்பு என பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகும் G.O.A.T படத்தின் ஷூட்டிங் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.

சென்னை, தாய்லாந்து என பல இடங்களில் G.O.A.T பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. படத்தில் இடம்பெற்ற சிஜி மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள்  சென்னை மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 

கேரளா சென்ற விஜய் 

இந்நிலையில் The Greatest of All Time படத்துக்காக நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றுள்ளார். முன்னதாக அவர் ஷூட்டிங்கிற்காக வரவுள்ள தகவல் கசிந்ததும் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து போஸ்டர்கள், பேனர்கள் என மலையாள திரையுலகினரே திக்குமுக்காடும் அளவுக்கு வரவேற்பு அளித்தனர். இதனிடையே விஜய் இன்று சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வந்தடைந்தார். அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காலை முதலே விமான நிலையத்தில் குவிந்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மாலை 5 மணியளவில் விமானம் மூலம் கேரளா வந்த விஜய்யை போலீசார் பலத்த பாதுக்காப்புடன் காருக்கு அழைத்துச் சென்றனர். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளது. 

முன்னதாக விஜய் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான வேலாயுதம், அதனைத் தொடர்ந்து காவலன்  படத்தின் ஷூட்டிங்கிறாக விஜய் கேரளாவுக்கு சென்றிருந்தார். இதன் பின்னர் அவரின் எந்த படத்தின் ஷூட்டிங்கும் அங்கு நடைபெறவில்லை. 14 வருடங்களுக்கு பிறகு விஜய் கேரளாவுக்கு வந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: Actress Deepa: பெண்கள் என்றால் இளக்காரமா? .. காதலித்தாலே தப்பானவளா? - கொதித்தெழுந்த தீபா!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மின்கட்டண கொள்ளையில் திமுக முதலிடம் - அன்புமணி கடும் கண்டனம்
தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மின்கட்டண கொள்ளையில் திமுக முதலிடம் - அன்புமணி கடும் கண்டனம்
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Embed widget