மேலும் அறிய

Thalapathy Vijay: 'தொடங்கியாச்சு விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்’ ... காமன் டிபி, மோஷன் போஸ்டர் வெளியீடு..!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி, மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளது. இவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி, மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளது. இவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இளைய தளபதி விஜய்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய் குழந்தை நட்சத்திரமாக அவர் இயக்கிய படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். விஜய்க்கு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்கள் ஏராளமான பெண் ரசிகைகளைப் பெற்றுக் கொடுத்தது. ரசிகர்களால் ‘இளைய தளபதி’ என அன்போடு அவர் அழைக்கப்பட்டார். 

தொடர்ந்து காதல் கதைகளில் நடித்து வந்த விஜய் 2002 ஆம் ஆண்டிற்குப் பின் தனது பாதையை ஆக்‌ஷன் பக்கமாக மாற்றினார். அதற்கு தொடக்கமாக ‘பகவதி’ படமும், அடித்தளமாக ‘திருமலை’ படமும் அமைந்தது. தொடர்ந்து கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார், மாஸ்டர் என பல பிளாக்பஸ்டர் ஆக்‌ஷன் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக திகழ்கிறார். 

தளபதி விஜய் 

‘இளைய தளபதி’ என அழைக்கப்பட்ட விஜய், கால மாற்றத்தால் ‘தளபதி’ என அழைக்கப்பட்டு வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு ‘வாரிசு’ படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Thalapathy Vijay: 'தொடங்கியாச்சு விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்’ ... காமன் டிபி, மோஷன் போஸ்டர் வெளியீடு..!

இதனிடையே விஜய் தனது 49வது பிறந்தநாளை ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடுகிறார். இதனை கொண்டாடும் விதமாக லியோ படத்தில் இருந்து ‘நான் ரெடி’ பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

பிறந்தநாள் கொண்டாட்டம் 

இதனிடையே விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மோஷன் போஸ்டர், காமன் டிபி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. காமன் டிபி புகைப்படத்தில் விஜய் தன்னை கண்ணாடியில் பார்ப்பது மாஸ்டர் படத்தின் போஸ்டரை ரீ-கிரியேட் செய்துள்ளது போல் உள்ளது. மேலும் அதில் “Compete With Yourself” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இதேபோல் விஜய் பிறந்தநாள் மோஷன் போஸ்டரை விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதில் விஜய் படங்களின் காட்சிகளும், அவரின் மேடை பேச்சுகளும் இடம் பெற்றுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Embed widget