மேலும் அறிய

Udhayanidhi Stalin: ஓகே ஓகே படத்தில் நீக்கப்பட்ட பிரபல நடிகையின் காட்சிகள்..உதயநிதி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

பாஸ் என்கிற பாஸ்கரன் படம் விநியோகம் பண்ணேன். அப்போது இயக்குநர் ராஜேஷிடம் சிவா மனசுல சக்தி, பாஸ் படம் நல்லாருக்கு என சொன்னேன். 

ஒரு கல் ஒரு கண்ணாடி படம் உருவானது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘கலகத்தலைவன்’. இப்படத்தின் ஹீரோயினாக நடிகை நிதி அகர்வாலும், முக்கிய வேடங்களில் ஆரவ், கலையரசன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி  இசையமைத்துள்ளனர். சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கலகத்தலைவன் நவம்பர் 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by 🤍𝗧𝗠 𝗧𝗘𝗠𝗣𝗟𝗔𝗧𝗘𝗦🤍||𝟲𝗞|| (@template_memez_tm)

இதனிடையே நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற உதயநிதியிடம், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆதவன் படத்தின் ஒரு காட்சியில் நான் நடித்த நிலையில் ஏதோ பெரிய நடிகர் மாதிரி எல்லாரும் எனக்கு கைதட்டி உசுப்பேத்தி விட்டுட்டாங்க. அப்புறம் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் விநியோகம் பண்ணேன். அப்போது இயக்குநர் ராஜேஷிடம் சிவா மனசுல சக்தி, பாஸ் படம் நல்லாருக்கு என சொன்னேன். 

உடனே அவர் என்னிடம் நீங்க நடிக்கிறீங்களா என கேட்டார். அதற்கு ஏதாவது கதை லைன் இருந்தா சொல்லுங்களேன் என நான் கேட்டேன். உடனே அவர் நீங்களும் உங்க ஃப்ரண்டும் பாண்டிச்சேரி போய் உங்க லவ்வரோட கல்யாணத்தை நிறுத்துறீங்க என சொன்னதும் சூப்பர் சார் பண்ணலாம் என சொன்னேன். பின்னர் யார் அந்த ஃப்ரண்டு என கேட்டேன். வேற யாரு சந்தானம் தான் என ராஜேஷ் சொன்னார். 

அந்த ஒரு லைன் மட்டும் தான் படத்துக்கு தேவை என நினைத்து எப்போ ஷூட்டிங் போலாம் என தினமும் ராஜேஷிடம் போன் பண்ணி கேட்டேன். முதல் படம் அப்படிங்கிறதால நல்லா பண்ணலாம் என நினைச்சேன். அதன்படி ஹன்சிகா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ள வந்தாங்க. ஷூட்டிங் எடுக்குறாரு..எடுக்குறாரு..எடுத்துகிட்டே இருக்காரு. கிட்டதட்ட 120 நாட்கள் ராஜேஷ் படம் எடுத்தாரு. 2 பாகமா இருந்துச்சு. நீங்க பார்த்தது பாதி படம் மட்டும் தான். 

Udhayanidhi Stalin: ஓகே ஓகே படத்தில் நீக்கப்பட்ட பிரபல நடிகையின் காட்சிகள்..உதயநிதி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

அப்படத்தில் சந்தானத்திற்கு இன்னொரு தனியா லவ் ஸ்டோரி இருக்கு. ஆண்ட்ரியா கெஸ்ட் ரோலில் 20 நாட்கள் நடிச்சாங்க. ஆனால் எடிட்டிங்கில் அந்த காட்சிகள் தூக்கப்பட்டது. எப்படியும் படம் ஓடாது என நினைத்த எங்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக ஒரு கல் ஒரு கண்ணாடி படம் சூப்பர் ஹிட்டானது . அதன்பிறகு படம் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து ஒன்றரை ஆண்டுகளாக வந்த கதையை வேண்டாம் என தவிர்த்தேன் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்க சரண்யா பொன்வண்ணன், அழகம் பெருமாள், மதுமிதா, சிறப்பு தோற்றத்தில் நடிகை சிநேகா, ஆர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget