மேலும் அறிய

Surya: "இப்படி நடக்கும் என நினைக்கவே இல்லை" ரோலக்ஸ் கதாபாத்திரத்தால் சூர்யா ஆச்சரியம்

ரோலக்ஸ் கதாபாத்திரத்தால் இப்படி ஒரு அன்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை என்று நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நான் நினைக்கவே இல்லை: 

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கங்குவா படத்தின் இயக்குனர் சிவாவுடன் நடிகர் சூர்யா பங்கேற்றார். அவரிடம் ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த சூர்யா, “ அரைநாள் மட்டுமே அதற்கான படப்பிடிப்பு  நடைபெற்றது. அந்த கதாபாத்திரத்தில் இப்படி ஒரு அன்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை.

அந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனராஜ் என்னைச் சந்தித்தார். ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு தனி படமும், இரும்புக்கை மாயாவி குறித்தும் பேசினோம். அவருக்கும் எனக்கும் சில வேலைகள் இருந்ததால் தள்ளிப்போகிறது. காலம்தான் பதில் சொல்லும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

ரோலக்ஸ்:

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படம் மாபெரும் ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் கிளைமேக்ஸ் காட்சிக்கு பிறகு வரும் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு ரோலக்ஸ் கதாபாத்திரமும் முக்கிய காரணமாக அமைந்தது.

லோகேஷ் கனகராஜ் யுனிவர்சான எல்.சி.யூ.வில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக தனிப்படம் உருவாக்கப்படும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது எல்.சி.யூ. படங்களில் மிகப்பெரிய வில்லனாக ரோலக்ஸ் கதாபாத்திரமே அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா படம்:

லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் கூலி படத்திற்கு பிறகு அவர் மீண்டும் எல்.சி.யூ. வரிசை படத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளார். அதில், தன்னுடைய எல்.சி.யூ. வரிசை படங்களில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரமும் அதில் இடம்பெறும் என்றும் அவர் கூறியிருந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சூர்யா நடிப்பில் கடைசியாக 2022ம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. அதன்பின்பு, விக்ரம், ராக்கெட்ரி, சர்ஃபியா படங்களில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தாலும் அவரது தனி படம் வெளியாகாமலே இருந்தது. இந்த நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் படம் வெளியாகிறது. மேலும், சூர்யா நடித்துள்ள சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பும் முடிந்து அதற்கான இறுதிக்கட்ட பணிகளை அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மேற்கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
Embed widget