மேலும் அறிய

செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்

தர்மன் படத்தில் ரஜினிகாந்துடன் பணியாற்றும் அனுபவங்களை படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்தர்மன்திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து பேசியது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

ரஜினி நடித்து வரும் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமளித்து வருகின்றன. சமீபத்தில் சிறப்பான ப்ரோமோவோடு ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அடுத்தபடியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். தர்மன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் பற்றி அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி

தர்மன் படம் குறித்து பேசிய அஸ்வத் மாரிமுத்து, “இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில், ரஜினி சார் போன்ற மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்து படம் இயக்குவது மிகப்பெரிய பொறுப்பு. படப்பிடிப்பு தளத்தில்கூட இந்த கூட்டணியை நினைத்தாலே எனக்கு பதற்றமாக இருக்கிறது என்று ரஜினி சாரிடம் சொன்னேன். ஆனால் அவருடன் பணியாற்றியது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. அவருக்கு வயதே ஆகவில்லை என்று தோன்றுகிறது. எப்போதும் உற்சாகமாக இருப்பார். செட்டில் ஒரு குழந்தை மாதிரி துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய கலகலப்பான இயல்பு முழு படப்பிடிப்பு தளத்தையும் உயிரோட்டமாக வைத்திருக்கும்என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தர்மன் படக்குழு குறித்து

அதோடு, “டிராகன் படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்பக் குழுவே தற்போதுதர்மன்படத்திலும் இணைந்துள்ளது. இந்த படம் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக உருவாக்கப்படுகிறது. குறிப்பாக இது முழுக்க முழுக்க தலைவர் ரசிகர்களுக்கான படம். ரஜினியின் ஸ்டைல், ஸ்வேக், ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும். ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்தாக அமையும்என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

ரஜினிகாந்தின் 173வது படமாக உருவாகும் தர்மன் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஆர். மகேந்திரன் இணை தயாரிப்பாளராக உள்ளார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். நடிகைகள் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget