லக்கி பாஸ்கர் இயக்குநருடன் இணையும் சூர்யா...சூரரைப் போற்று ஸ்டைலில் கதை
லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கும் மாருதி 796சிசி இஞ்சின் உருவாக்கப்பட்ட வரலாற்று திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
சூர்யா
சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. சோர்ந்து போயிருந்த சூர்யா ரசிகர்களுக்கு ஆறுதலாக சமீபத்தில் சூர்யாவின் அடுத்த படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரெட்ரோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பூஜா ஜெக்டே , ஜெயராம் , பிரகாஷ் ராஜ் , கருணாகரன் , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாருதி இஞ்ஜின் உருவான கதை
இப்படம் தொடர்பாக சில தகவல்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இந்திய அரசு மற்றும் சுஸூகி மோட்டார் நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த மாருதி 796 ரக இஞ்சின் உருவாக்கப்பட்ட கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாகவும் இதில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் நிறுவனமான சுஸூகி மோட்டார்ஸ் மற்றும் இந்திய அரசு சேர்ந்து இந்த இஞ்சினை உருவாக்கியதற்கு பின் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இணைந்து இப்படத்திற்கான திரைக்கதையை இயக்குநர் எழுதி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை விஜயின் தளபதி 69 படத்தை தயாரிக்கும் கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
The buzz is that acclaimed director Venky Atluri, known for hits like Vaathi and Lucky Bhaskar, is gearing up for his next venture titled 796CC. This intriguing project is said to explore the captivating story behind the development of the first-ever 796CC engine for the iconic… pic.twitter.com/q8bEJrZl8W
— SIIMA (@siima) December 27, 2024
மேலும் படிக்க : ஆண்கள் எல்லாம் நரகத்தில் சாகட்டும்.அண்ணா பல்கலைக்கழகம் சர்ச்சை குறித்து கார்த்திக் சுப்பராஜ்