Suriya Bala Movie: பாலாவுடனான படம் ட்ராப்பா..? போட்டோவை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா..!
சூர்யாவின் 41 ஆவது படம் ட்ராப் ஆனதாக தகவல் வெளியான நிலையில், தானும் பாலாவும் படப்பிடிப்பில் ஒன்றாக இருக்கும் போட்டோவை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
சூர்யாவின் 41 ஆவது படம் ட்ராப் ஆனதாக தகவல் வெளியான நிலையில், தானும் பாலாவும் படப்பிடிப்பில் ஒன்றாக இருக்கும் போட்டாவை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
சூர்யா 41
பிரபல இயக்குநரான பாலா தற்போது நடிகர் சூர்யாவின் 41 ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் பாலாவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்றதாகவும் தகவல் பரவியது. இந்த தகவலை மறுத்த படக்குழு இராண்டாவது கட்டப்படப்பிடிப்பு கோவாவில் தொடங்க உள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் அண்மையில் இந்தப்படம் ட்ராப் ஆகுவதாக செய்திகள் வெளியானது.
படம் ட்ராப்பா
இது குறித்து சூர்யா தரப்பில் ஊடகங்கள் விசாரித்த போது, “கன்னியாகுமரியில் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பில், சூர்யா உட்பட பிற நடிகர்களின் காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும், அப்போது பெர்ஃபெக்ஷன் என்ற பெயரில் பாலா எடுத்த காட்சியையே திரும்ப திரும்ப எடுத்ததாகவும் அடுத்த நாளும் அது தொடர்பான காட்சிகளையே எடுத்ததாகவும் சொன்னார்கள். ஆனால் இந்தப்படம் ட்ராப் ஆகவில்லை. படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக வில்லை” என்று சொல்லப்பட்டது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா
Waiting to be back on sets…!! #Suriya41 pic.twitter.com/enuJ5MNbZJ
— Suriya Sivakumar (@Suriya_offl) May 26, 2022
படம் தொடர்பான இந்த சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தானும் பாலாவும் படப்பிடிப்பில் ஒன்றாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு “நாங்கள் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறோம்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.