Srikanth : பாதியிலேயே ஓடிப்போன பூமிகா... ஆப்பிள் பெண்ணே சீக்ரெட்.. உண்மையை உடைத்த ஸ்ரீகாந்த்
Srikanth : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ... பாடல் ஷூட்டிங் சமயத்தில் நடந்த உண்மை சம்பவத்தை பற்றி போட்டுடைத்தார் நடிகர் ஸ்ரீகாந்த்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று திரையுலகில் மிக பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரியான பட தேர்வுகள் செய்யாததால் காணாமல் போன நடிகர்கள் பலரை இந்த தமிழ் சினிமா கடந்து வந்துள்ளது. அதே சமயம் ஒரு சிலருக்கு அபாரமான திறமை இருந்த போதிலும் துணை நடிகராக, இரண்டாவது நடிகராக நடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். அப்படி ஒரு நடிகர் தான் ஸ்ரீகாந்த்.
2002ம் ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். சாக்லெட் பாயாக வலம் வந்த ஸ்ரீகாந்த் ஏராளமான ரசிகர்களை குறிப்பாக ரசிகைகளின் ரோமியோவாக திகழ்ந்தார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் அதை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம் என ரொமான்டிக் ஹீரோ என்ற இமேஜை ஏற்படுத்தினார். அடுத்ததாக கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளியான 'பார்த்திபன் கனவு' திரைப்படம் மூலம் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அதை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் போனது. மீண்டும் ஷங்கரின் 'நண்பன்' திரைப்படத்தில் நடிகர் விஜய் நண்பனாக நடித்ததன் மூலம் ரீ என்டரி கிடைத்தது. அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் காணாது கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடைய முதல் படமான 'ரோஜா கூட்டம்' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் எவர்கிரீன் பாடலான 'ஆப்பிள் பெண்ணே நீ யாரோ...' பாடல் குறித்த சீக்ரெட் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ... பாடல் இரண்டு முறை ஷூட்டிங் செய்யப்பட்டது. இரண்டாவது முறை ஷூட்டிங் வேறு ஒரு லொகேஷனில் நடைபெற்றது. அப்படி ட்ராவல் செய்யும் போது பாதி வழியிலேயே பூமிகா கோபித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஆனால் அவர் எதற்காக கோபப்பட்டு கிளம்பினார் என்பது இன்று வரை எனக்கு தெரியாது. அவர் எங்கு போனார் என்பது யாருக்குமே தெரியாது. அவரை தேடி மூன்று மேனேஜர்கள் ஊர் ஊராக சென்று தேடினார்கள்.
படத்தின் தயாரிப்பாளர், பாடலை ஷூட் செய்யாமல் திரும்பக்கூடாது என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார். இரண்டு நாட்கள் பூமிகாவுக்காக காத்திருந்தோம். அடுத்த நாள் அவங்க இனி வரப்போறது இல்லை என முடிவு செய்து நானாகவே நடித்து அந்த பாடலை முடித்தேன். ஒரு சில ஷாட்கள் பூமிகா இல்லாமலேயே நானாக நடித்த ஷாட்தான். ஏற்கனவே இந்த பாடலின் ஷூட்டிங் வேறு ஒரு டான்ஸ் மாஸ்டரை வைத்து எடுத்து வைத்து இருந்தோம். அதனால் அந்த இரண்டு ஷூட்டிங் ஷாட்களையும் இணைந்துதான் இந்த பாடல் வெளியானது. அறைகுறையாக முடிக்கப்பட்ட பாடல் என்றாலும் சூப்பர் ஹிட் அடித்தது என கூறியிருந்தார்.