பெண்கள் விஷயத்தில் ஸ்ரீகாந்த் படு வீக்... குடும்பத்தில் வெடித்த பிரச்சனை! டாட்டா காட்டிய வந்தனா!
நடிகர் ஸ்ரீகாந்த் போதை மருந்து வழக்கில் செய்யப்பட்டு பின்னர், இதுவரை அவரின் குடும்பத்தில் இருந்து யாரும் அவரை சந்திக்காத நிலையில், அவருடைய குடும்ப சூழல் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

'ரோஜா கூட்டம் ' படத்தின் மூலம் அறிமுகமான அழகு ஹீரோ தான் ஸ்ரீகாந்த். முதல் படத்திலேயே சாக்லேட் ஹீரோ என என்கிற இமேஜை பெற்றார். மேலும் ஒரே படத்தில் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் உருவாகினர். இதைத் தொடர்ந்து இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றி பெற்ற நிலையில் வளர்ந்து வரும் ஹீரோவாக மாறினார்.
ரோஜா கூட்டம் படத்தில் நடிக்கும் போது, நடிகை பூமிகாவுடன் காரில் சென்ற புகைப்படம் வெளியான நிலையில், இருவரும் காதலிக்கிறார்கள் என வதந்திகள் பரவியது. பின்னர் இது வதந்தியாகவே கடந்து சென்றாலும்... நடிகை சினேகாவுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஸ்ரீகாந்த், நிஜத்திலும் அவரை காதலித்தார் என கூறப்பட்டது. ஆனால் ஸ்ரீகாந்தின் பெற்றோர் சினேகாவை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்களின் காதல் பிரேக்கப்பில் முடிந்தது.

இதற்க்கு பின்னர் தான், வந்தனா ஸ்ரீகாந்த் வாழ்க்கையில் வந்தார். தமிழ் சினிமாவைச் சேர்ந்த சர்ச்சை நடிகை ஒருவர், வந்தனாவின் தோழி என்பதால், ஒரு முறை பாரதிக்கு ஸ்ரீகாந்துடன் அவர் சென்ற போது தான் இருவரும் அறிமுகமாகினார்கள். முதல் சந்திப்பிலேயே, ஸ்ரீகாந்துக்கு வந்தனாவை பிடித்த நிலையில்... சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்த தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்தனாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பின்னர் இருவரும் பேசி பழகிய நிலையில் இருவரும் காதலிக்க துவங்கினர்.
வந்தனாவோடது டேட்டிங் செய்ய துவங்கிய ஸ்ரீகாந்த், பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே ஹைதராபாத்தில் வைத்து, வந்தனாவின் பெற்றோர் முன்னிலையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சென்னையில் உள்ள வந்தனாவின் வீட்டில் குடும்பம் நடத்திய ஸ்ரீகாந்த், மூன்று மாதங்கள் கழித்து வந்தனா மீது உள்ள வழக்கை காரணம் காட்டி உன்னுடன் வாழ முடியாது என பிரச்சனை செய்ய துவங்கினார். ஆனால் வந்தனா ஸ்ரீகாந்தை விடுவது போல் இல்லை. ஸ்ரீகாந்துக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் திரட்டியது மட்டுமின்றி, ஸ்ரீகாந்த் வீட்டு முன்பே அமர்ந்து தனக்கு நியாயம் வேண்டும்... என போராட்டத்தில் குதித்தார். அந்த சமயத்தில் வந்தனாவுக்கு ஆதரவாக பல மீடியாக்கள் குரல் கொடுத்தன.
இதன் பின்னர் தன் மீதான தவறை ஒப்புக்கொள்ளும் விதமாக இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாகவும், கூடிய விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தனர். அதன்படி வந்தனாவுக்கு, ஸ்ரீகாந்துக்கு சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. வந்தனா, ஸ்ரீகாந்தை விட பல மடங்கு வசதியானவர். அவருக்கு சொந்தமாக கல்லூரி மற்றும் சில தொழில் நிறுவனங்கள் உள்ளது. அவருடைய தந்தை பெரிய பிசினஸ்மேனாக உள்ளார். வந்தனா தன்னுடைய எம்பிஏ பட்டப்படிப்பை ஆஸ்திரேலியாவில் முடித்துவிட்டு வந்த போது தான், ஸ்ரீகாந்துடன் தொடர்பு ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது.
திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய பிசினஸ் சம்பந்தமான வேலைகளை கவனித்து வந்தாலும், குழந்தை, கணவர், குடும்பம் என மிகவும் சந்தோஷமாக இருந்தார். அதேநேரம் நடிகர் ஸ்ரீகாந்துக்கும் சில கட்டுப்பாடுகள் அவர் விதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ரீகாந்த் குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் சுழன்று அடிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணம் ஸ்ரீகாந்த் சில பெண்களுடன் பழகியது தான் என கூறப்படுகிறது. இதனை அவரே தற்போது போலீஸ் விசாரணையிலும் ஒப்புக்கொண்டுள்ளாராம். இதனால் வந்த பிரச்சனையால் வந்தனா கணவர் ஸ்ரீகாந்த்திடம் இருந்து விவாகரத்து பெரும் முடிவில் இருப்பதாகவும், எனவே தன்னுடைய பிள்ளைகள் தற்போது பள்ளியில் படித்து வருவதால் அவர்களை ஸ்ரீகாந்த்திடமே விட்டுவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த் அதீத போதை மருந்துக்கு அடிமையாகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் கூட, அவருடைய வீட்டில் இருந்து யாரும் அவரை பார்க்க வில்லையாம். ஸ்ரீகாந்தின் மகன் தற்போது உடல்நலம் இன்றி உள்ளதால்... தன்னுடைய மகன் மற்றும் மகளை பார்க்க வேண்டும் என சிறையில் கண்ணீர்வடித்தபடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.





















