மேலும் அறிய

Actor Soori : கொட்டுக்காளியாக சூரியின் மிரட்டும் அவதாரம்... படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு

தற்போது சூரி நடித்துவரும் கொட்டுக்காளி படத்தின் சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன

மக்களை மகிழ்விக்கும் கலைஞன் ‘சூரி’

திரையில் நம்மை மகிழ்விக்கும் கலைஞர்கள் எல்லோரும் பெரிய குடும்ப பின்னணியில் இருந்து வருவதில்லை. அப்படி வந்தாலும் தங்கள் முயற்சியின் மூலமாகவே மக்களின் மனதில் இடம் பிடிப்பார்கள். இதில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தங்களை கேலிக்குள்ளாக்கி, வருத்திக் கொண்டு பிறரை சிரிக்க வைத்து மகிழ்ச்சி காண்பதே தாங்கள் படும் கஷ்டங்களுக்கு அருமருந்து என பிரபலங்களே சொல்வார்கள். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் தான் சூரி. 

 மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் அவர், 10க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் ஒரே ஒரு நொடி மட்டுமே தோன்றுவார்.  இப்படியான நிலையில் தான்  சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படம். இதில் அசால்ட்டாக  50 பரோட்டாக்களை  சாப்பிடுபவராக அவர் செய்த சம்பவம் சரித்திரமாக மாறியது. தனக்கென ஒரு பாடி லாங்குவேஜ், வட்டார மொழியை உருவாக்கி கொண்டு ரசிகர்களிடம் புகழ்பெற ஆரம்பித்தார். 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், களவாணி, நான் மகான் அல்ல, சுந்தரப்பாண்டியன், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, ஜில்லா, பூஜை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரத்துரை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கடைக்குட்டி சிங்கம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். 

காமெடி டூ ஹீரோ

பெரும்பாலான படங்களில் காமெடியனாக நடித்தாலும் சூரியின் நடிப்பு பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியது என்று திரைக்கலைஞர் முதல் சாமானிய ரசிகர்கள் வரை அறிந்திருந்தார்கள். அவருக்கு ஏற்ற ஒரு நல்ல வாய்ப்பு வரும் வரை காத்திருந்த சூரிக்கு வெற்றிமாறன் மூலமாக அந்த வாய்ப்பு வந்தது. வெற்றிமாறன் இயக்கிய விடுதலைப் படத்தில் கதாநாயகனாக நடித்த சூரி அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார்.

அடுத்துக் கொட்டுக்காளி

விடுதலைப் படத்தைத் தொடர்ந்து தற்போது சூரி கதாநாயகனாக நடித்து வரும் படம் கொட்டுக்காளி. வெற்றிமாறன் இயக்கும் விடுதலை இரண்டாம் பாகத்தில்  நடித்துள்ள சூரி தற்போது பி எச் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கொட்டுக்காளி படத்திலும்  நடித்து வருகிறார். விக்னேஷ் ஷிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரித்த கூழாங்கல் திரைப்படத்தை இயக்கி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றவர் இயக்குநர் வினோத்ராஜ். மலையாள நடிகை அன்னா பென் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களில் முற்றிலும் புதிய தோற்றத்தில் காணப்படுகிறார் சூரி.

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
Embed widget