மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
"ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் எனது மனைவினா இது தான் எனக்கு தலை தீபாவளி" - நடிகர் எஸ்.ஜே.சூர்யா
இயக்குநராக இருந்து நடிகராக மாறியபோது ஏன் இயக்குநராக இல்லை என கேட்கும் போது மனசு வலியாக இருக்கும், நட்சத்திர நடிகராக மாறுவதற்கு இந்த படம் எனக்கு ஜங்ஸனாக கிடைத்துள்ளது. - SJ சூர்யா பேட்டி
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், SJ சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் இன்று ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் திரைப்படத்தின் படக்குழுவினர், படத்தில் நடித்த தாண்டிக்குடி மலைவாழ் மக்களுடன் இணைந்து திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா மற்றும் தயாரிப்பாளர் , கேமராமேன் , எடிட்டர் உள்ளிட்டோரும் திரைப்படத்தை பார்த்து ரசித்தனர். இதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் எஸ்.ஜே சூர்யா, "இந்த படம் தரமான படைப்பு உலகளாவிய வெற்றி கிடைத்துள்ளது. கலெக்ஷன் பார்க்கும் படம் பெயர் எடுக்காது, பெயர் எடுக்கும் படம் கலெக்சன் எடுக்காது. ஆனா இரண்டையும் சேர்த்து ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் பெற்றுள்ளது. இந்த படத்திற்கு மக்கள் கொடுக்கின்ற வரவேற்பு படம் பார்க்கும் தரம் வளர்ந்துள்ளது. ரசிகர்களின் தரம் வளரும் போது கதை எழுதுபவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கின்றது.
மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகப்பெரிய நன்றி வார நாட்களில் கலெக்சன் கம்மியா தான் இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனால் மழையை தாண்டி , வார நாட்களை தாண்டி நல்ல வசூல் வந்துள்ளது. எத்தனையோ படங்களில் லாரன்ஸ் நடித்திருந்தாலும், எத்தனையோ சேவை செய்திருந்தாலும், இப்படியெல்லாம் நடிக்க முடியும் என நடித்துகாட்டியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது கடிதத்தில் அதனை வெளிப்படுத்தியுள்ளார். ரஜினி சார் மூலம் இது போன்ற ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. கொடுத்து வைத்திருக்க வேண்டும். சூப்பர்ஸ்டார் கூறியது போல சட்டாணியாக சகதிக்குள் புகுந்து தனது நடிப்பை வெளிப்படுத்தியவர். இந்த படத்தில் கேமராமேன் உலகத்தரமான படைப்பை கொடுத்துள்ளார், ஆங்கில படத்துக்கு நிகராக ஒளிப்பதிவு செய்து இருந்தார் காலம் கடந்த உலக தரமான போட்டோகிராபி செய்து கொடுத்துள்ளார்.
மிகப்பெரிய பட்ஜெட் அளவில் ரூ.100 கோடி செலவில் இந்த படத்தை எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாதிரியான கண்டெண்டுக்கு இவ்வளவு செலவழிக்கிற என்ற பயமில்லாமல் நம்பி அடிச்சீங்கல்ல வீரமான முடிவை எடுத்தீர்கள் என சூப்பர் ஸ்டார் தயாரிப்பாளரிடம் கூறினார். இந்த படத்தை பற்றி தலைவர் ரஜினி ஒரே வார்த்தை குறிஞ்சிப்பூ என்று சொல்லிவிட்டார், தலைவர் ரஜினிக்கும் மக்களுக்கும் , இறைவனுக்கும் அப்பா அம்மாவுக்கும் மிகப்பெரிய நன்றி. இந்த வெற்றியை இறைவன் அடுத்தடுத்து தர வேண்டும். நாங்கள் மட்டுமல்ல படத்தில் பார்க்கும் தாண்டிக்குடி மக்கள் அனைவருமே உண்மையான நடிகர்கள். அவர்களின் நடிப்பு பிரமிக்கவைத்தது அதனை ரசித்து பார்த்தேன், அனைவக்குருமே பயங்கரமான ரெஸ்பான்ஸ் எல்லாருக்கும் நன்றி" என்றார்.
எஸ் ஜே சூர்யா - சிவகுமார் சூர்யாவுக்கு போட்டியாக வருவார் என்ற கேள்விக்கு?
ஏன் என்னை இப்படி கோர்த்துவிடுகிறீர்கள் நல்லா தானே போய்கிட்டு இருக்கு அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல!!
நம்ம சரியாக தயார் படுத்திக்கொண்டால் நம்மை காந்தம் போல நல்ல விஷயங்கள் இயக்கத் தொடங்கிவிடும். அப்போது நல்ல விஷயங்கள் தேடிவரும் தகுதியான நல்ல மனசையும் படிப்பையும் நல்ல வேலை கொடு என்று இறைவனை கேட்டாலே வந்துவிடும். வில்லனாகவே நடித்துக் கொண்டிருந்தேன் தற்போது செகண்ட் ஹீரோவாக நடிக்க கூடிய அளவிற்கு ஆண்டவன் கொண்டு வந்துள்ளான். இது அடுத்தடுத்து பெருகிக்கொண்டே போக வேண்டும்
ரஜினி கமலுடன் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு?
கமல் சாருடன் இந்தியன் 2 வில் நடிக்கிறேன் தலைவருடன் படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன்
இயக்குநராக நடிகராக மாறியுள்ளீர்கள் என்ற கேள்விக்கு ?
நான் இயக்குனராக வந்ததே நடிகனாக வேண்டும் என்றுதான். நடிகனாகும்போது எல்லாரும் என்னடா டைரக்ட் பண்ணாமல் நடிக்கிறேன் எனக் கூறுவார்கள். அப்போது மனசு வலியா இருக்கும். ஆனால், நடிகராக மாற்றி இறைவியிலிருந்து கார்த்தி சுப்புராஜ் வாய்ப்பு கொடுத்தார். இப்போது ஸ்டார் நடிகராக வேண்டும் என்பதற்காக இந்த படம் ஜங்ஷன் பாயிண்டாக அமைந்துள்ளது.
வரும் ஆண்டு தலைதீபாவளியை கொண்டாடுவாரா SJ சூர்யா என்ற கேள்விக்கு?
ஜிகர்தண்டா திரைப்படம் எனது பொண்டாட்டி என்றால், இது எனக்கு தல தீபாவளி தான். அப்போது குறுக்கிட்ட தயாரிப்பாளர் அதற்கு நான் தான் மாமனார் என கூறினார். அப்ப நான் என்ன நடுவுல சும்மாவா என ராகவா லாரன்ஸ் கூறியதால் அனைவரும் சிரித்தனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion