மேலும் அறிய

Sivakarthikeyan: “வாய்ப்பு வராதே?” - வெற்றிமாறன் படத்தில் நடிக்க யோசித்த சூரி.. உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்!

நான் சேனலில் இருக்கும்போது எல்லாரையும் அண்ணன் தான் சொல்வேன். ஆனால் சூரியை ஆத்மார்த்தமாக அண்ணன் என சொல்வேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சூரி எனக்கு உண்மையிலேயே அண்ணன் தான் என கருடன் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கருடன்”. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மே 31 ஆம் தேதி  தியேட்டரில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருப்பது தெரிகிறது. இயக்குநர் துரை செந்தில் குமார் என்னுடைய எதிர்நீச்சல் மற்றும் காக்கிச்சட்டை படத்தின் இயக்குநர். திட்ட வேண்டும் என்றால் கூட சிரிச்சிக்கிட்டே தான் பேசுவார். அருமையான களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. 

அவர் என்னிடம் எப்போது கதை சொல்ல வந்தாலும் நானும் பதிலுக்கு ஒரு கதை சொல்வேன். அவருடன் வேலை செய்தது நல்ல அனுபவம். சூரி எனக்கு உண்மையிலேயே அண்ணன் தான். நான் சேனலில் இருக்கும்போது எல்லாரையும் அண்ணன் தான் சொல்வேன். ஆனால் சூரியை ஆத்மார்த்தமாக அண்ணன் என சொல்வேன். அவர் கதையின் நாயகனாக  நீங்க நடிக்கலாம் என சொல்லி முதன்முதலில் கதை சொன்னது நான் தான். இப்ப பெரிய, பெரிய இயக்குநர்கள் கூட வேலை செய்து வருகிறார். ஆனால் நான் சொன்னது நியாபகம் இருக்கா என தெரியவில்லை. 

ஆனால் அவர் அதெல்லாம் நமக்கு செட் ஆகாது என சொல்வார். அப்படியிருக்கையில் ஒருநாள் என்னிடம் வந்து தம்பி உங்களிடம் ஒன்னு சொல்ல வேண்டும். நேரில் சந்தித்ததும், “வெற்றிமாறன் என்னை வைத்து படம் பண்ண முடிவு செய்துள்ளார்” என சொன்னார். நான், “சூப்பர் அண்ணே.. அவர் என்ன சொல்றாரோ அதை அப்படியே பண்ணிடுங்க” என பதிலளித்தேன். 

இதைக் கேட்டதும், “நான் வெற்றிமாறன் கூட படம் பண்ணிருவேன் தம்பி. ஆனால் அடுத்ததாக யாரும் கூப்பிடாமல் விட்டால் என்ன செய்வேன்?” என சூரி கேட்டார். காமெடி பண்ற யாரையும் குறைவாக எண்ணி விட வேண்டாம். அவர்களால் சீரியஸான கேரக்டர்களும் பண்ண முடியும். நாங்கள் “கொட்டுக்காளி” படத்தில் இணைந்திருக்கிறோன். விடுதலை படத்தை விட ஒருபடி மேலே அந்த படம் சூரிக்கு அமையும். அவர் ரொம்ப தெளிவாக இருக்கிறார். கொட்டுக்காளி படம் விரைவில் வெளியாகும். 

சூரி அண்ணனுக்கு சப்போர்ட் செய்ய சசிகுமார் இப்படத்தில் இணைந்துள்ளார். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் சூரி அண்ணன் மாதிரி ஒரு படத்தில் உங்களுடன் இணைந்து நடிப்பேன்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Embed widget