மேலும் அறிய

Ajithkumar:“வீட்டுல பைக் வாங்கி தரல.. அஜித்தோட பைக் ரைடு போக ஆசையா இருக்கு” - சிவகார்த்திகேயன் உருக்கம்

ஏலியன் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள அயலான் படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்துடன் இணைந்து பைக் பயணம் மேற்கொள்ள வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாகவும் முக்கிய கேரக்டர்களில் சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள அயலான் படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார்  இயக்கியுள்ளார். 

ஏலியன் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள அயலான் படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அயலான் பட ப்ரோமோஷன் தொடர்பாக பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். 

அதில் ஒரு நேர்காணலில் நடிகர் அஜித் பற்றி சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். அதாவது, “அஜித் சாரை ஒருமுறை நேரில் சந்தித்த போது அவர் என்னிடம், ‘சிவா நீங்க பைக் ரைடு எல்லாம் போவீங்களா?” என கேட்டார். நான், ‘சார், பைக் ரைடு எங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் உள்ளூரில் ஓட்டுவது தான். உங்க அளவுக்கு எல்லாம் என்னால் வர முடியாது சார். நீங்க எல்லா நாட்டுக்கும் பயணம் செல்கிறீர்கள். ஆனால் அஜித் மாதிரி பைக் பயணம் மேற்கொள்ள வேண்டும் என ஆசை உள்ளது.

நான் நடுவுல கொஞ்ச நாள் என் நண்பரோட பைக் ஓட்டிட்டு இருந்தேன். வீட்டுல பைக் வாங்கி கொடுக்கல. சித்தப்பா பைக்கை கொஞ்ச  நாள் வச்சிருந்தேன். ஆனால் என்னால் அதனை பரமாரிக்க முடியவில்லை. இப்ப பைக் வாங்கிட்டு அதை நல்லா ஓட்ட கத்துக்கணும். அஜித் வைத்திருக்கிற பைக் வாங்கி ஓட்ட கத்துகிட்டு ஒருமுறை அவர்களுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கு. அதை நடத்தி காட்டுறதை விட வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயம் எதுவும் இல்லை” என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நடிகர் அஜித்குமார் நடித்த ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அதேசமயம் பைக், கார் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட அஜித் பல நாடுகளுக்கும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget