Watch Video : ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறிய STR... பத்து தல படத்துக்கு கொடுத்த வரவேற்புக்கு நன்றி... வைரலாகும் வீடியோ
ரசிகர்ளை சந்தித்த நடிகர் சிம்பு அவர்களுக்கு பிரியாணி பரிமாறிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது
ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் கடந்த மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், சந்தோஷ் உள்ளிட்ட பல நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடிகர் சிம்பு நடித்திருந்தார்.
சாதனை படைத்த படம்:
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'பத்து தல' திரைப்படம் முதல் நாளே ரூ.12.3 கோடி வசூலித்தது. இதுவரையில் சிம்பு நடித்த திரைப்படங்களின் முதல் நாள் வசூலோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இதுவே அதிகமாக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மஃப்ட்டி படத்தின் ரீமேக்:
கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மஃப்ட்டி படத்தின் ரீமேக் படமாக வெளியான 'பத்து தல' படம் சற்று புதிய திரைக்கதையுடன் வெளியானது. இந்த கேங்ஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பத்து தல திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்களை நேரில் சந்தித்தார் நடிகர் சிம்பு.
#SilambarasanTR Fansmeet happened Today..❣️pic.twitter.com/luSgohoP9k
— Laxmi Kanth (@iammoviebuff007) April 18, 2023
பிரியாணி விருந்து வைத்த சிம்பு :
சிம்பு மாவட்ட ரசிகர் மன்றத்தின் தலைவர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் சர்ப்ரைஸாக நடிகர் சிம்பு கலந்து கொண்டார். பத்து தல திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவிற்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். அது மட்டுமின்றி பாசத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படங்கள் எடுப்பதற்கு முன்னர் சிம்பு அவர் கையாலேயே ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறினார். அதன் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.