Pathu Thala: சிம்பு ரசிகர்களே...குடும்பத்தோடு “பத்து தல” படம் பார்த்த டி.ராஜேந்தர் ... என்ன சொன்னார் தெரியுமா?
நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படத்தை அவரது குடும்பத்தினர் சிறப்பு காட்சியில் நேற்றிரவு கண்டு ரசித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படத்தை அவரது குடும்பத்தினர் சிறப்பு காட்சியில் நேற்றிரவு கண்டு ரசித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சிலம்பரசன் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு பத்து தல படத்தில் நடித்துள்ளார். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நாளை (மார்ச் 30) வெளியாகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
முதலில் இந்த படம் கடந்தாண்டு டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. தொடர்ந்து சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி படத்தின் முதல் பாடல் வெளியானது. படத்தின் டீசர், ட்ரெய்லர் எல்லாம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் வழக்கத்துக்கு மாறாக காளை பட கெட்டப்பில் சிம்பு வந்திருந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் சிம்பு 2005 ஆம் காலக்கட்டத்தில் இருந்தபோது தனது படங்களின் பாடல்களை பாடியும், நடனமாடியும் வியப்பில் ஆழ்த்தினார். சிம்புவின் பேச்சிலும் அனல் பறந்தது. இந்தப் படம் ஆரம்பித்தபோது கஷ்டமான சூழலில் இருந்தேன் என்றும், இங்கு தட்டி விடுறதுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக் கொடுக்க யாருமே இல்லை என்றும் சிம்பு தெரிவித்த கருத்துகள் பெரும் வைரலாகின.
ரசிகர்கள் நீங்க சந்தோசமா இருங்க. நான் வேற மாதிரி வந்துருக்கேன். ரசிகர்களாகிய உங்களை தலைகுனிய விட மாட்டேன். தமிழ் சினிமா பெருமைப்படும்படி நான் நடந்துப்பேன்” என தெரிவித்தார். இதற்கிடையில் பத்து தல படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 5 மணி காட்சி என்ற போதிலும் முதல் காட்சி 8 மணிக்கு தொடங்கும் நிலையில் பல இடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.
இந்நிலையில் பத்து தல படத்தை அவரது குடும்பத்தினர் சிறப்பு காட்சியில் நேற்றிரவு கண்டு ரசித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து படம் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள சிம்புவின் அப்பாவும், இயக்குநருமான டி.ராஜேந்தர் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.