’2கே கிட்ஸ்களுக்கு பிடித்தமான கமர்சியல் படம்தான் டக்கர்’ - நடிகர் சித்தார்த்
“டக்கர் திரைப்படம் பொழுதுபோக்காக ஜாலியாக பாப் கார்ன் சாப்பிட்டு கொண்டே பார்ப்பதற்கான படம். 2k கிட்ஸ்களுக்கு பிடித்தமான கமர்சியல் படம்."
கோவை ப்ரோட்வே மாலில் திரையிடப்பட்டுள்ள டக்கர் திரைப்படத்தை அப்படத்தின் கதாநாயகர் நடிகர் சித்தார்த் ரசிகர்களுடன் இணைந்து கண்டு கழித்தார்.
பின்னர் நடிகர் சித்தார்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டக்கர் திரைப்படம் பொழுதுபோக்காக ஜாலியாக பாப் கார்ன் சாப்பிட்டு கொண்டே பார்ப்பதற்கான படம். 2k கிட்ஸ்களுக்கு பிடித்தமான கமர்சியல் படம். நான் முதல்முறையாக இந்தப் படத்தில் ஆக்சன் செய்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை யாரெல்லாம் இளமையாக நினைக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் இளைஞர்கள் தான். கோவையை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் நண்பர்களுடன் திரையரங்குகளுக்கு வந்து திரைப்படத்தை பாருங்கள்.
இந்த திரைப்படத்தை திரையரங்கில் கரகோஷத்துடன், சிரிப்புடன் படத்தை ரசித்து பார்க்கின்றனர். யோகிபாபு தான் அதிக சம்பளம் வாங்கி கொண்டு சிரிக்க வைக்கும் நடிகர். மக்களை சிரிக்க வைப்பத்து மிகவும் கடினம். பொதுமக்கள் பொழுதுபோக்கு படங்கள் ரசித்தால் நாங்களும் பொழுதுபோக்கு படங்களை எடுக்க வசதியாக இருக்கும். காதல் படங்களில் இது ஒரு வித்தியாசமான காதல் படம். அடுத்ததடுத்து ஆக்சனுக்கு செல்வது பார்வையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கையில் தான் உள்ளது. பாய்ஸ் திரைப்படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகியுள்ளது. 20 ஆண்டுகள் என்பதை 2.0 ஆக எடுத்துக்கொள்கிறேன்.
பேன் இந்தியா படமாக மட்டும் அல்லாமல், பேன் வேர்ல்ட் ஆக படம் பார்க்கப்பட வேண்டும். நான் தற்போது இந்தியன்-2 வில் நடித்து கொண்டிருக்கிறேன். இசைக்கு அனைத்து படங்களிலும் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன்” எனத் தெரிவித்தார். அரசியல் விமர்சனங்கள் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த், ”எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும், அதை அங்கே பேசிக்கிறேன்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்