Siddharth: “காதலிக்க கத்துக்கோங்க, வாழறதுக்கு காதலிங்க” - க்யூட் வீடியோ பகிர்ந்த சித்தார்த்!
Actor Siddharth: அதிதியின் பிறந்தநாள் அன்று சித்தார்த் “பிறந்தநாள் வாழ்த்துகள் பார்ட்னர்” எனப் பதிவிட்டு வாழ்த்தி இருந்தார். மேலும் புத்தாண்டன்றும் நெருக்கமான புகைப்படத்தை இருவரும் பகிர்ந்திருந்தனர்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான சித்தார்த் நடிப்பில், சென்ற ஆண்டு வெளியான சித்தா, டக்கர் ஆகிய இரண்டு படங்களுமே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றன.
பன்முகத் திறமையாளர்
இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக தன் சினிமா பயணத்தைத் தொடங்கி, ஷங்கரின் பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் இன்று பிரபல நடிகராக சித்தார்த் வலம் வருகிறார். விடலை சிறுவனாக பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி, இன்று புரிதல் மேம்பட்ட நடிகராக வளர்ந்து நிற்கும் சித்தார்த்துக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
நடிப்பு தாண்டி பின்னணி பாடகர், டப்பிங் தருவது, தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட நடிகராக வலம் வரும் சித்தார்த், சமீபத்தில் அயலான் படத்தில் ஏலியனுக்கு குரல் கொடுத்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார்.
நடிகை அதிதியுடன் காதல்
நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து, ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் சித்தார்த் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சித்தார்த் நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மகா சமுத்திரம் என்ற படத்தில் இணைந்து நடித்த பின் இருவரும் காதலில் விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்து பொது இடங்களுக்கு ஒன்றாக வருவது, இணையத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வது என இருவரும் மகிழ்ச்சியாக வலம் வந்தபடி உள்ளனர்.
முன்னதாக அதிதியின் பிறந்தநாள் அன்று சித்தார்த் “பிறந்தநாள் வாழ்த்துகள் பார்ட்னர்” எனப் பதிவிட்டு வாழ்த்தி இருந்தார். மேலும் புத்தாண்டன்றும் நெருக்கமான புகைப்படத்தை இருவரும் பகிர்ந்திருந்தனர். ஆனால் வெளிப்படையாக எந்த நேர்க்காணலிலும் இருவரும் தங்கள் காதலை இன்று வரை கூறவில்லை. இந்நிலையில் “காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்” என நடிகர் சித்தார்த் தற்போது வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
காதலிக்க கத்துக்கோங்க!
தனது செல்ல நாயான நோரிக்கு மாரி மாரி முத்த மழை பொழியும் சித்தார்த், “காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள், காதல் நீங்கள் வாழ் கற்றுக்கொடுக்கும், உங்களுக்கு உதவும், வாழ்வதற்காக காதலியுங்கள், காதல் தான் வாழ்க்கையில் எல்லாம்” எனப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோவில் நடிகர் கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பல பிரபலங்களும் கமெண்ட் செய்து இதயங்களை பறக்க விட்டு வருகின்றனர்.