மேலும் அறிய

Priya Bhavani Shankar: சிம்ரன், த்ரிஷா வரிசையில் பிரியா பவானி சங்கர்...புகழ்ந்து தள்ளிய எஸ்.ஜே.சூர்யா!

எஸ்.ஜே.சூர்யாவிடம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்ததற்கான காரணத்தை கேட்டபோது, அதற்கு மிக சுவாரஸ்யமான ஒரு பதிலை அளித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

நடிகை பிரியா பவானி சங்கர் முகத்தோற்றத்தின் நடிகை சிம்ரனை ஒத்திருப்பதாகக் கூறியுள்ளார் நடிகர் இயக்குநர் எஸ். ஜே. சூர்யா.

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பொம்மை. மொழி, அபியும் நானும் படங்களை இயக்கிய ராதா மோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், சென்னையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் மிக உற்சாகமாகப் பேசினார்கள்.

அப்போது எஸ்.ஜே.சூர்யாவிடம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்ததற்கான காரணத்தை கேட்டபோது, அதற்கு மிக சுவாரஸ்யமான ஒரு பதிலை அளித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

பிரியா பவானி சங்கரின் முகச்சாயல்  தனது அக்காவின் மகளின் முகச்சாயலோடு இருப்பதாகக் கூறியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. மேலும் வெகு சிலருக்கே இந்த மாதிரியான முக அமைப்பு இருப்பதாகவும், த்ரிஷா, சிம்ரன், ஆகியவர்களுக்கு இந்த மாதிரியான முகச்சாயல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த முகச்சாயல் இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட முகச்சாயல் மிகச் சரியாகப் பொருந்தும் எனவும், உதாரணத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் கஜோல் ஆகியவர்களின் முகச் சாயல்கள் கச்சிதமாக திரையில் பொருந்தும் என தனது வித்தியாசமான அவதானிப்பை விளக்கியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.  மேலும் பிரியா பவானி சங்கரின் முகச்சாயல் நடிகை சிம்ரனுடன் ஒத்துப்போவதாக கூறினார் அவர்.

“எனக்கும் பிரியா பவானி சங்கருக்கும் ஒரு மேத்தமேட்டிக்கல் ஃபீச்சர்ஸ் செட் ஆகுது, அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்” எனவும் கலகலப்பாகப் பேசினார்.

மான்ஸ்டர்

எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் முதல்முறையாக இணைந்து நடித்த படம் மான்ஸ்டர். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வெற்றி பெற்றது. மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரின் கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே இருந்தது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே, சூர்யா  ஒரே நேரத்தில் நடிகராகவும் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். பொம்மை படத்தைத் தொடர்ந்து தற்போது இந்தியன் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

ஏற்கெனவே ஸ்பைடர், மெர்சல்,  மாநாடு , டான் ஆகியப் படங்களில் மாறுபட்ட வில்லனாக நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் எஸ்.ஜே. சூர்யா. தற்போது இந்தியன் 2 வில் அவரது கதாபாத்திரத்திற்காக மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Arnab: 145 கி.மீ. வேகம்.. 26 செ.மீ. மழை.. மரண பயத்தை காட்டிய அர்னாப் புயல்.. பள்ளிகளுக்கு லீவு! என்னென்ன பாதிப்பு?
Cyclone Arnab: 145 கி.மீ. வேகம்.. 26 செ.மீ. மழை.. மரண பயத்தை காட்டிய அர்னாப் புயல்.. பள்ளிகளுக்கு லீவு! என்னென்ன பாதிப்பு?
TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
OMR ECR Road: OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
Embed widget