மேலும் அறிய

15 வருட போராட்டம்...ஏமாற்றங்கள் ஏராளம்...மனம் திறந்த ரிஷிகாந்த்...

15 வருடங்களாக தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் ரிஷிகாந்த் ‘மொத ராத்திரி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

சினிமாவில் 15 வருடங்களை நிறைவு செய்துள்ள நடிகர் ரிஷிகாந்த் தனது பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

யார் இந்த ரிஷிகாந்த்?

கடந்த 1992 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் வசித்து வந்த ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த ரிஷிகாந்த், தஞ்சையில் தனது பள்ளி படிப்பையும், சென்னை SRM கல்லூரியில் தனது கல்லூரி படிப்பையும் மேற்கொண்டார். கலை மீது கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக டெட் எண்ட் ஸ்ட்ரீட் என்ற இசைக் குழுவில் பாடகர் மற்றும் கிட்டார் கலைஞராக ரிஷிகாந்த் சிறிது காலம் பணியாற்றியுனார். பின்னர், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட ரிஷிகாந்த், 2010 ஆம் ஆண்டு  யூடியூபில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் நகைச்சுவைக் குழுவான ’டெம்பிள் மங்கிஸ்' சேனலில் இணைந்தார். அங்கு பல நகைச்சுவை மற்றும் ஸ்கெட்ச் வீடியோக்களில் நடித்து, தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். அதுவே அவர் பிற்காலத்தில் தமிழ் சினிமாவிற்குள் நுழைவதற்கான அடித்தளமாக அமைந்தது. 

சினிமாவில் அறிமுகம்

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பெஞ்ச் டாக்கீஸ் படம் மூலம் ரிஷிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, இரும்புத்திரை, கே-13, மகாமுனி, ஹீரோ உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்து தனது ஆற்றலை வளர்த்துக் கொண்டார். 2022 ஆம் ஆண்டு சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் அசோக் செல்வனின் நண்பனாக அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரம் சற்று கவனம் பெற்றது. பின்னர், கடந்த ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்திலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஹீரோவாக அறிமுகம்

சுமார் 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக நடித்து ஆற்றல் பெற்ற ரிஷிகாந்த், கடந்த அகஸ்ட் மாதம் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வெளியான ‘மொத ராத்திரி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ரிஷிகாந்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதையடுத்து, கடந்த வாரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான டோரதி திரைப்படத்திலும் 2 ஹீரோக்களில் ஒருவராக சனத் உடன் இணைந்து அவர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ரிஷிகாந்த் மற்றும் சனத் ஏற்று நடித்த கதாப்பாத்திரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  இந்த இரு படங்களின் வெற்றியும், அதற்கு ரசிகர்கள் அளித்த பேர் ஆதரவும் . 15 ஆண்டுகள் கடினமாக உழைத்த ரிஷிகாந்தை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

ரிஷிகாந்த் உருக்கம்

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிஷிகாந்த் ஒரு நெகிழ்ச்சி பதிவை பகிர்ந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “என்னுடைய 15 வருடப் பயணம் அர்த்தமுள்ளதாக இருந்தது என்று என்னை உணரவைத்த ஒவ்வொரு நல்ல உள்ளத்துக்கும், என்னுடன் இத்தனை காலமும் நின்ற ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.

பல வருடக் காத்திருப்புகள், எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள். வாழ்க்கை கற்றும் கொடுத்த பாடங்கள், ‘இன்னும் எவ்வளவு காலம்?’, ‘இந்தப் பயணம் என்னை எங்கு அழைத்துச் செல்லும்?’ என்று நான் என்னையே கேள்வி கேட்ட தருணங்கள் உண்டு. ஆனால் இன்று, நீங்கள் என் மீது பொழிந்து கொண்டிருக்கும் அன்பையும், பாசத்தையும், ஆதரவையும் வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லுவது என்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.”

ரசிகர்களுக்கு நன்றி

”உங்கள் அனைவரிடம் இருந்தும் ஏராளமான மெசேஜ்கள், கமெண்ட்கள், வாழ்த்துகள், எடிட்கள், அழைப்புகள், அன்பான வார்த்தைகள் என தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியாக இரண்டு படங்களின் வெளியீடுகள் மற்றும் புரமோஷன்கள் காரணமாக, உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க, நன்றி சொல்ல என்னால் இதுவரை முடியவில்லை. நீங்கள் என் மீது வைத்திருக்கும் இந்த அன்பு என்னை உண்மையிலேயே நெகிழச் செய்கிறது. ஆனால், அந்த அன்பு என் தலைக்குள் ஏறிவிடக்கூடாது என்று நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

மாறாக, உங்கள் அன்பு என்னை முன்பைவிட அதிக பொறுப்புணர்வுடன் இருக்கச் வலியுறுத்துகிறது. என் மீது அன்பையும், நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நீங்கள் வைக்கத் தொடங்கும்போது, அந்த அன்பை மதிப்பது என்னுடைய பொறுப்பாகிறது. அந்தப் பொறுப்பை மிகவும் பணிவுடன் சுமக்க விரும்புகிறேன். இனிமேல் நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் இன்னும் கடினமாக உழைப்பேன். இன்னும் அதிகமாக கற்றுக் கொள்வேன். மிக முக்கியமாக, நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், உங்கள் நம்பிக்கையை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

15 வருடங்களாக அங்கீகாரத்துக்காக போராடிய எனக்கு இன்று நீங்கள் கொடுத்து வரும் இந்த அன்பு மிகவும் சிறப்பானதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்கிறது. அதிலும் என்னை மிகவும் ஆழமாகத் தொட்ட ஒரு விஷயம். உங்கள் குடும்பங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. இன்று எனக்கு ஒரு மிகப் பெரிய குடும்பம் கிடைத்துவிட்டது என்ற உணர்வு வருகிறது. என்னுடைய பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. என் உண்மையான பொறுப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது என்று உணர்கிறேன். இன்னும் கடினமாக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் என்மீது வைத்திருக்கும் இந்த அன்புக்கும் தகுதியானவனாக மாற தொடர்ந்து முயற்சி செய்வேன்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget