மேலும் அறிய

Vijayakanth: “விஜயகாந்த்தை மிஸ் பண்றேன்.. அவர் மதுரை வீரன்” - வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்!

என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்து இருக்கிறார்கள். இது நமக்கு எல்லாம் மகிழ்ச்சியான நிகழ்வாகும்.

விஜயகாந்த் நம்மிடையே இல்லை என்பதை இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமா ரசிகர்களால் புரட்சி கலைஞர் என அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த், தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலிலும் தனது இருப்பை பதிவு செய்தார். தன்னுடைய வாழ்நாள் எல்லாம் பிற மக்களின் துயர் துடைத்த அவருக்கு வயது வித்தியாசமில்லாத ரசிகர்கள் உள்ளனர். இப்படியான நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். 

அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தினமும் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். விஜயகாந்த் மறைந்தும் அவர் புகழ் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கிடையில் மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்த மே 9 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் இந்த விருதை விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதாவிடம் வழங்கினார். 

விஜயகாந்துக்கு விருது வழங்கியது தொடர்பாக நடிகர்கள் சத்யராஜ், பிரபு உள்ளிட்டோர் வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “வணக்கம். என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்து இருக்கிறார்கள். இது நமக்கு எல்லாம் மகிழ்ச்சியான நிகழ்வாகும். இந்திய அரசின்  பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் விஜயகாந்தின் வரலாற்றை பதிவு செய்திருக்கிறார்கள். அது அவரின் பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். விஜயகாந்த் நம்மிடையே இல்லை என்பதை இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திடீரென தோன்றி, சாதனைகள் செய்து, மறைந்து விட்டார். இனிமேல் விஜயகாந்த் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது. அவரை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். மதுரையில் பிறந்த நம் மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நாமம் வாழ்க” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Jailer 2 Songs: ”அலப்பற கெளப்பறோம்”..... ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
Embed widget