மேலும் அறிய

உன் நடிப்பு பிடிக்காது என்ற பாரதிராஜா...அஞ்சலி செலுத்தி ரஜினி பகிர்ந்த தகவல்

தனது மனதில் பட்டதை எந்த வித ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக பேசக்கூடியவர் பாரதிராஜா என நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்

பாரதிராஜா உயிருடன் இருந்தபோதே அவரை சந்திக்க பலமுறை முயற்சி செய்ததாகவும் ஆனால் அவர் குணமைந்து வந்துவிடுவார் அப்போது அவரை பார்க்க வரும்படி சொல்லிவிட்டார்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று தனது 84 வயதில் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது உடன் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா அவரிடன் திரைப்பணியை கெளரவிக்கும் விதமாக அவரது இறுதி ஊர்வலத்தை முழு அரசு மரியாதையுடன் நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் அனைத்து பிரபலங்களும் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பாரதிராஜா குறித்து சிவ நிமிடங்கள் பேசினார். 

உன் நடிப்பு பிரிக்காது என்ற பாரதிராஜா

"என்னுடைய 50 ஆண்டுகால நண்பர். அவருடைய திறமைகளைப் பற்றியும் அவருடைய சாதனைகளைப் பற்றியும் எல்லாருக்குமே தெரியும். அதுமட்டுமில்லாமல் திரையுலகில் புதிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்களை அறிமுகப்படுத்தியவர். அவரை வாழ வைத்த சினிமாத் துறையை வாழவைத்தவர். இயக்குநர்கள் முதல் நடிகர்கள் வரை யாருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அவர்களுக்காக முதலில் ஓடி வருபவர் பாரதிராஜா அவர்கள். அவர்கள் படைப்புகள் என்றென்றும் மக்களுடைய மனதில்  நீடிக்கும். தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தை மாதிரி . மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுபவர். என்னைப் பற்றி நிறைய விமர்சனங்களை வைத்திருக்கிறார். உன்னை எனக்கு பிடிக்கும் ஆனால்  உன் நடிப்பு எனக்கு பிடிக்காது என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். அவ்வளவு வெளிப்படையாக வேறு யாரும் பேச மாட்டார்கள். அதனால் தான் கலைஞர் கருணாநிதி , எம்.ஜி,ஆர் , சிவாஜி ஆகிய அனைவரும் அவருடன் நல்ல நட்பு கொண்டிருந்தார்கள். யாருடைய வீட்டிலும் அவர்களின் பெட்ரூம் வரை எந்த நேரத்திலும்  நேரடியாக செல்லக் கூடிய ஆளாக அவர் இருந்தார். அவர் உயிரோடிருக்கும் போதே அவருடைய பார்க்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் குணமடைந்த பின் வந்து பார்க்க சொன்னார்கள். கடைசியில் அவர் உயிருடன் இருக்கும் போது பார்க்க முடியாமலே போய்விட்டது. எப்போதும் அவர் என்னுடன் இருப்பார். அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என பாரதிராஜா குறித்து ரஜினி பேசினார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget