மேலும் அறிய

Rajinikanth: ''நாடு இல்லன்னா நாம இல்ல.. தேசியக்கொடி ஏத்துங்க..'' வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்!

சுதந்திரதினத்தன்று தேசிய கொடியை வீட்டின் முன்னால் ஏற்றி வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் 75-வது அமிர்த பெருவிழாவினை கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் இன்று முதல் வரும் 15-வது தேதி வரை, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு கேட்டுகொண்டதுடன், சமூகவலைதளங்களில் தங்களது முகப்பு படத்தில் தேசியக் கொடி புகைப்படத்தை வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது முகப்பு படங்களில் தேசியக்கொடி புகைப்படத்தை வைத்தனர். வீட்டின் முன்பும் தேசியக்கொடியை ஏற்றினர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி நாம் இந்தியனென்று பெருமைகொள்வோம்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

 

அண்மையில் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பேசிய ரஜினிகாந்த், “ ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கிட்டத்தட்ட 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேசிக்கொண்டிருந்தோம். வடநாட்டுப்பகுதிகளிலேயே வசித்து வந்தவர், தமிழ்நாட்டு வந்திருக்கிறார். தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நேர்மை, கடின உழைப்பு, உண்மை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஆன்மீக உணர்வு அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அரசியல் பற்றி நாங்கள் விவாதித்தோம். அதைப்பற்றி உங்களிடம் சொல்ல முடியாது. "அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை” மேலும், வரும் காலத்தில் அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை” என்றார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா? என்று கேட்டதற்கு இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும், ஜி.எஸ்.டி. பற்றி கேட்டதற்கு கருத்து ஏதும் இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார். மேலும் அவரிடம் பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி உயர்வு குறித்து கருத்து என்ன கேட்ட போது நோ கமெண்ட்ஸ் என்றார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்த ரசிர்களுக்கு, அரசியலுக்கு வருவதாக 2018ம் ஆண்டு ரஜினிகாந்த் அறிவித்தார். சட்டசபை தேர்தல் நெருங்கிய வேளையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அவரது அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதன்பின்னர், அவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது, ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 15-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாக ரஜினிகாந்த் தகவல் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget