மேலும் அறிய

Kalki 2898 AD: கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!

Book My Show இணைய தளத்தில் பிரபாஸ் நடித்த “கல்கி ஏடி 2898” படத்துக்கு பதிலாக பலரும் நடிகர் ராஜசேகர் நடித்த கல்கி படத்துக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளது தெரிய வந்தது.

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள கல்கி ஏடி 2898 படம் ரிலீசாகி விட்டதாக நினைத்து, ரசிகர்கள் வேறு படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்த சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி, அன்னா பென், ஷோபனா, சாஸ்வதா சட்டர்ஜி, பிரம்மானந்தம், பசுபதி, அன்னா பென் மற்றும் மாளவிகா நாயர் என பலரும் நடித்துள்ள படம் “கல்கி ஏடி 2898”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பெரும் பொருட் செலவில் வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படமானது விஷ்ணுவின் 10வது அவதாரமாக கருதப்படும் கல்கி கற்பனை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் முதலில் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஜூன் 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. 

இதனிடையே கல்கி படத்தின் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தெலங்கானாவில் மட்டுமே ரூ.7 கோடி வரை ப்ரீ புக்கிங் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலும் , கர்நாடகாவிலும் தலா 2 கோடி வரை டிக்கெட் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமாவது பிரபாஸூக்கு ஹிட்டாக வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.

இப்படியான நிலையில் Book My Show இணைய தளத்தில் பிரபாஸ் நடித்த “கல்கி ஏடி 2898” படத்துக்கு பதிலாக பலரும் நடிகர் ராஜசேகர் நடித்த கல்கி படத்துக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. இதுதாண்டா போலீஸ் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான ராஜசேகர் நடித்த கல்கி படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் எப்படி சம்பந்தமில்லாமல் தற்போது காட்டுகிறது என பிரபாஸின் கல்கி படக்குழு குழம்பி போனது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளதாக Book My Show நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கல்கி படத்துக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு, பிரபாஸின் 'கல்கி 2898 AD'க்கு மாற்றி தரப்படும் என்று உறுதியளித்துள்ளது.

அதேசமயம் கல்கி படம் முன்பதிவில் ஏற்பட்ட குழப்பத்துக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என நடிகர் ராஜசேகரும் விளக்கமளித்துள்ளார். முன்பதிவில் ரசிகர்கள் தன் மேல் உள்ள அன்பால் என்ன படம் என்றே பார்க்காமல் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளது நடிகர் பிரபாஸை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
Embed widget