ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப்பில் 7 பதக்கங்கள்.. “நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்” என மகனை கொண்டாடும் மாதவன்..
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை பதிவுசெய்துள்ள மாதவன் தன்னை ஆசிர்வதிக்கப்பட்ட தகப்பன் எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 47வது ஜூனியர் தேசிய நீச்சல் போட்டி அண்மையில் பெங்களுருவில் உள்ள பஸவனகுடி நீச்சல் மையத்தில் நடைபெற்றது.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்றிருந்த வேதாந்த் மாதவன் ஏழு பதக்கங்களை வென்றுள்ளார். வேதாந்த நடிகர் மாதவனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை பதிவுசெய்துள்ள மாதவன் தன்னை ஆசீர்வதிக்கப்பட்ட தகப்பன் எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
View this post on Instagram
கடந்த மார்ச் மாதம்தான் லத்வியாவில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றிருந்தார் வேதாந்த்.
அந்த போட்டியில் இரண்டு வெண்கலம் மற்றும் ஒரு தங்கம் வென்றது இந்தியாவில் இருந்து சென்ற அணி. அதுகுறித்தும் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதவன் பகிர்ந்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram