மேலும் அறிய

Prabhas Gift To Salaar Crew: படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 ....பிரபாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்!

சலார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் சர்ப்ரைஸ் பரிசு ஒன்றைக் கொடுத்துள்ளார் பிரபாஸ்.

கே.ஜி. எஃப் திரைப்பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படக்குழுவினர் அனைவருக்கும் பரிசு கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார் நடிகர் பிரபாஸ்.

கே.ஜி.எஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்தப் படம் சலார். நடிகர் பிரபாஸ் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். இந்தியத் திரைப்பட ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து வரும் பான் இந்தியத் திரைப்படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது.  இந்நிலையில் நடிகர் பிரபாஸ் படத்தில் பணியாற்றிய அனைவரது மனதைக் கவரும் வகையில் ஒரு செயலை செய்திருக்கிறார்.

சலார் படத்தில் ஒவ்வொரு துறையிலும் பணிபுரிந்த ஊழியர்களின் வங்கிக் கணக்கிற்கும் நடிகர் பிரபாஸ் 10,000  ரூபாய் அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது செயலால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் பாராட்டு மழையைப் பொழிந்து வருகிறார்கள்.

சலார்

பிரபாஸ், ஸ்ருதி ஹாசன், ப்ரித்விராஜ் சுகுமாரன், ஜகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் சலார்.

சுமார் 250 கோடி செலவில் உருவாகி வருகிறது சலார் திரைப்படம். இந்தப் படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில், படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள் தொடர்ச்சியாக படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பாளன் கிரகண்டூர் ஆகிய இருவரிடமும் ட்விட்டரில் அப்டேட் கேட்டு வருகின்றனர்

இந்நிலையில் பிரசாந்த் நீல், கிரகண்டூர் இருவரும் முன்னதாக தங்களது ட்விட்டர் கணக்குகளையே டி ஆக்டிவேட் செய்தனர். சலார் திரைப்படம் வரும் செப்டம்வர் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆதிபுருஷ்

இந்நிலையில், இன்று நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகியுள்ளது. சுமார் 500 கோடி செலவில் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஓம் ராவத் இயக்கத்தில்  க்ரித்தி சனோன், சைஃப் அலிகான் ஆகியோர் நடிப்பில் ராமாயணக் கதையை  அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக ஆதிபுருஷ் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர்கள் வெளியாகி சில சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. முன்னதாக, ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் அனுமனுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ஆதிபுருஷ் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் வி,எஃப்,எக்ஸ் காட்சிகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது ரசிகர்களின் மனக்குறையாக இருக்கிறது. ஆதிபுருஷ் திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget