மேலும் அறிய

பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்

பாக்யராஜ் இறுதிச்சடங்கு விவகாரத்தில் தன்னை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? என்ற ரசிகர்கள் கேள்விக்கு பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரது மரணம் மொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உதவியாளர் யார்?

அவரது இறுதிச்சடங்கில் அவரது உதவியாளரும், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் முன்னே நின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். சமீபத்தில் பார்த்திபன் அளித்த பேட்டியில் பாக்யராஜ் உதவியாளர் ஒருவர் இறுதிச்சடங்கில் பார்த்திபன் முன் நின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததை பாக்யராஜின் மற்றொரு உதவியாளர் விமர்சித்ததாக அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. 

அந்த உதவியாளர் சுந்தர்ராஜன், லிவிங்ஸ்டன் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், இந்த விவகாரம் குறித்து பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

சுந்தர்ராஜன், பாண்டியராஜா?

பாக்யராஜ் சார் பற்றிய என்னுடைய பேட்டிகளில், மனிதாபிமானமற்ற ஒரு மனிதன் கக்கிய விஷத்தைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட வருத்தத்தைப் பற்றியும் அந்த விஷமியின் பெயர் குறிப்பிடாமலே பேசியிருந்தேன்.

அந்த நபர் இவராக இருப்பாரோ என்ற யூகத்தில் சிலர் தவறுதலாக என் மரியாதைக்குரிய இயக்குநர்கள் பாண்டியராஜன் மற்றும் ஆர். சுந்தரராஜன் ஆகியோர் மீது கோபமான கருத்துகளைப் பதிவிட்டிருப்பதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

நல்லதை மட்டும் நினைவில் கொள்வோம்:

அந்த நாகரீகமற்ற நண்பரின் பெயர் யாருக்கும் தெரியாமலே போகட்டும்,கூடவே என் நினைவு பெட்டகத்திலிருந்தும் அவர் கக்கிய விஷமும் கரைந்துப் போகட்டும். நல்லதை மட்டும் நினைவில் கொள்ளும் வகையில் இன்று ஒரு நற்செய்தி.

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள்  சங்கத்தில், எழுத்தின் வெளிச்சத்திற்கு விளக்கேற்றப்பட்டது. நான் என் விருப்பத்தை விண்ணப்பமாக எழுதி, ஒரு பெரிய அறிவிப்புப் பலகையில் இடம் பெற செய்து எடுத்துச்  சென்றேன்.

நிரந்தர தலைவர் பாக்யராஜ்:

ஏகமனதாக அனைவரும் ஒப்புக்கொண்ட அந்த விண்ணப்பம் என்னவென்றால், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் நிரந்தர கௌரவத் தலைவர் கே. பாக்யராஜ் என்பதே. இனி ஆண்டாண்டு காலமானாலும், அது அப்படியே நிலைத்திருக்கும்.

கூடவே, அந்தச் சங்கத்திற்குப் புதிதாக எழுப்பப்படும் கட்டிடத்திற்கு என் குருவின் பெயர் சூட்டப்படும் என்பதும் மகிழ்ச்சியான செய்தி.

அதற்காக 247 எழுத்துக்களைக் கோர்த்து ஒரு மாலையாக்கி, சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு  சூட்டி என் மகிழ்ச்சியை நன்றியுடன் காணிக்கையாக்குகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பார்த்திபன் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டிருந்தாலும், ரசிகர்கள் அந்த உதவியாளர் யார்? என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget