மேலும் அறிய

நடிகரான நாசரின் தம்பி...அதுவும் கௌதம் மேனன் நடிக்க வேண்டிய கேரக்டர்ல நடிக்கிறாராமே...!

பனி விழும் மலர் வனம் என்ற ஒரு படத்தில் நான் ஏற்கனவே ஹீரோ அப்பாவா நடிச்சேன். ஆனால் என் அப்பா, என் தம்பி ஆகியோரை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் இந்த படத்துல நடிக்க தயங்கினேன்.

நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் ஜீவி படத்தின் 2 ஆம் பாகம் மூலம் நடிகர் நாசரின் தம்பி அறிமுகமாகிறார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான‘8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான வெற்றியின் 2வது படம் ‘ஜீவி’. இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜீவி படம் வசூலில் சாதனைப் படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. 

கருணாகரன், ரோகிணி, மைம் கோபி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நிலையில் அறிமுக இயக்குநர் வி.ஜெ.கோபிநாத் இப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். படத்தின் முக்கோண எஃபெக்ட் கதையம்சம்  பார்வையாளர்களின் மூளைக்கு வேலை தரும் வகையில் உருவாக்கப்பட்டதால் படம் பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்த படத்தின் இறுதியில் வெற்றியும் கருணாகரனும் ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருக்க கதை முடிக்கப்பட்டிருக்கும். 

இதனைத் தொடர்ந்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜீவி-2 உருவாவதாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதுவரை இல்லாத வகையில் தமிழ் சினிமாவில் இத்தனை நேர்த்தியான இரண்டாவது பாகம் எடுத்திருக்க முடியாது என்ற அளவில் ஜீவி 2 படம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டதால் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by aha Tamil (@ahatamil)

இப்படத்தின் டீசரை கடந்த ஜூலை 2 ஆம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜீவி-2 படமானது நேரடியானது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதுதொடர்பாக வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், ஒரு நாள் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆபீஸில் இருந்து போன் வந்ததாகவும், இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர். 

பனி விழும் மலர் வனம் என்ற ஒரு படத்தில் நான் ஏற்கனவே ஹீரோவுக்கு அப்பாவா நடிச்சேன். ஆனால் வயசான என் அப்பா, மனநிலை சரியில்லாத என் தம்பி ஆகியோரை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் இந்த படத்துல நடிக்க தயங்கினேன். ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எனக்கு வசதியான ஷெட்யூலை பிளான் பண்ணி கொடுத்தனர். இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரலாம் என படம் பார்த்த சில பேர் சொன்னாங்க என ஜவஹர் தெரிவித்துள்ளார். 

முதலில் இந்த கேரக்டருக்கு இயக்குநர் கௌதம் மேனனை அப்ரோச் பண்ணிருக்காங்க. அவரால கால்ஷீட் பிரச்சனை காரணமாக பண்ண முடியல. அதனால் என்னை எப்படி தெரிஞ்சி கூப்பிட்டாங்கன்னு தெரியல என ஜவஹர் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget