மேலும் அறிய

Mukesh - Saritha : கர்ப்பமாக இருந்தப்போ வயித்துல எட்டி உதைச்சார்.. முன்னாள் கணவர் பற்றி சரிதா

பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் சிக்கியுள்ள மலையாள நடிகர் முகேஷ் பற்றி அவரது முன்னாள் மனைவியான நடிகை சரிதா குறியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் முகேஷ் 

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகியதைத் தொடர்ந்து கேரள நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மலையாள நடிகர் மற்றும் அரசியல்வாதியான முகேஷ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் குற்றம்சாட்டினார்.

முகேஷுடன் சேர்த்து இயக்குநர் ரஞ்சித் , ஜெயசூர்யா , இடவேல பாபு  உள்ளிட்டவர்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அண்மைக்காலத் தகவலின் படி  நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து அரசியலை விட்டு விலகி இருக்கும்படி கேரள மார்க்ஸிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

முகேஷ் பற்றி முன்னாள் மனைவி சரிதா

 இச்சூழலில் நடிகர் முகேஷ் பற்றி அவரது முன்னாள் மனைவி  நடிகை சரிதாவின் நேர்காணல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  சரிதா மற்றும் முகேஷிற்கு 1988 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள். தங்கள் விவாகரத்தைத் தொடர்ந்து  தனது முன்னாள் கணவர் முகேஷ் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார். 

தனது திருமண வாழ்க்கை முழுக்க முழுக்க கொடுமைகளால் நிறைந்திருந்ததை சரிதா இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.  ”நான் கர்ப்பிணியாக இருந்தபோது முகேஷ் என் வயிற்றில் காலால் உதைத்து என்னை தள்ளிவிட்டார். வலியில் நான் அழுததைப் பார்த்து நீ நல்லாவே நடிக்கிறாய் என்று அவர் சொன்னார். அவர் என்னை கொடுமைப்படுத்தியபோதும் என்னுடைய மாமனாருக்காக நான் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன். ஒவ்வொரு முறையும் என்னை ஏதோ ஒரு வகையில் காயப்படுத்திக் கொண்டே இருந்தார் முகேஷ். ஒரு முறை நான் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தபோது நான் காரில் ஏறச் சென்றேன். அப்போது வேண்டுமென்றே காரை முன்னும் பின்னுமாக நகர்த்தி என்னை ஏறவிடாமல் செய்தார். நான் கீழே விழுந்து அங்கேயே உட்கார்ந்து அழத் தொடங்கினேன். இன்னொரு நாள் குடித்துவிட்டு வீட்டிற்கு தாமதமாக வந்ததைக் கேட்டபோது என் தலைமுடியை பிடித்து தரையில் போட்டு அடித்தார். 

எங்கள் விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்றால் மற்ற பெண்களுடன் அவருக்கு இருந்த உறவுதான். ஓணம் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தது மாதிரி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வெளியிடுவோம். ஆனால் திருமண வாழ்க்கையில் இருந்தபோதே அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருந்தது. தனது தவறுகளை எல்லாம் உணர்ந்து அவர் திருந்துவார் என்று நான் எதிர்பார்த்தேன்” என சரிதா தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'அதிகார பகிர்வு ' X தளத்திலிருந்து நீக்கப்பட்ட வீடியோ - திருமாவின் விளக்கம் என்ன ?
'அதிகார பகிர்வு ' X தளத்திலிருந்து நீக்கப்பட்ட வீடியோ - திருமாவின் விளக்கம் என்ன ?
விஜயின் கடைசி படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் தளபதி
விஜயின் கடைசி படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் தளபதி
"ராமரை நீக்க முயற்சி செய்தால் நாடு இருக்காது" தடாலடியாக பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Salem Leopard: கோழிகளை வேட்டையாடிய சிறுத்தை... வெளியான சிசிடிவியால் சேலம் மக்கள் அச்சம்
கோழிகளை வேட்டையாடிய சிறுத்தை... வெளியான சிசிடிவியால் சேலம் மக்கள் அச்சம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan X Post |ஆட்சியில் பங்கு.! திமுகவுக்கு திருமா செக்! 2026-ல் கூட்டணி ஆட்சியா?Singer Mano sons issue | பதுங்கிய மனோ மகன்கள்POLICE-க்கு கிடைத்த சிக்னல் நடந்தது என்ன?Priyanka Gandhi On Annapoorna | ”கேள்வியே கேட்கக் கூடாதா?பாஜகவின் தந்திரமா நிர்மலா?”சீறும் பிரியங்காElephant Subbulakshmi | உயிரிழந்த குன்றக்குடி யானை! கதறி அழுத மக்கள்! சுப்புலட்சுமியின் இறுதி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'அதிகார பகிர்வு ' X தளத்திலிருந்து நீக்கப்பட்ட வீடியோ - திருமாவின் விளக்கம் என்ன ?
'அதிகார பகிர்வு ' X தளத்திலிருந்து நீக்கப்பட்ட வீடியோ - திருமாவின் விளக்கம் என்ன ?
விஜயின் கடைசி படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் தளபதி
விஜயின் கடைசி படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் தளபதி
"ராமரை நீக்க முயற்சி செய்தால் நாடு இருக்காது" தடாலடியாக பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Salem Leopard: கோழிகளை வேட்டையாடிய சிறுத்தை... வெளியான சிசிடிவியால் சேலம் மக்கள் அச்சம்
கோழிகளை வேட்டையாடிய சிறுத்தை... வெளியான சிசிடிவியால் சேலம் மக்கள் அச்சம்
Breaking News LIVE 14 Sep: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் - பிரதமர் மோடி பேச்சு
Breaking News LIVE 14 Sep: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் - பிரதமர் மோடி பேச்சு
Asian Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி.. பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
Asian Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி.. பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? ஓப்பனாக பேசிய திருமாவளவன்!
திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? ஓப்பனாக பேசிய திருமாவளவன்!
"என்னால நேத்து நைட் தூங்க முடியல" போராட்டக் களத்தில் மருத்துவர்கள் முன்னிலையில் மம்தா உருக்கம்!
Embed widget