Mirchi Senthil: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகர்... உண்மை என்ன?
வானொலியில் பணிபுரிந்து வந்த மிர்ச்சி செந்தில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்
வானொலியில் பணிபுரிந்து வந்த மிர்ச்சி செந்தில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்த சீரியலில் செந்திலுக்கு ஜோடியாக ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா மகாலட்சுமி நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக ஒரு கதை ஒளிப்பரப்பாகி வந்த நிலையில், ஊரடங்கு தளர்விற்கு பின்னர் அதே பெயரில் வேறு கதை ஒளிப்பரப்பானது. சீரியலிலும் சில நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும் சீரியலுக்கு நல்ல வரவேற்பே இருந்தது. சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மிர்ச்சி செந்திலுக்கு இதன் மூலம் ஏராளனமான ரசிகர்கள் குவிந்தனர்.
View this post on Instagram
இதனிடையில் அவர் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைத்திருந்த நிலையில், அந்தத் தகவல் வெறும் வதந்தி என்பது தெரிய தற்போது தெரிய வந்துள்ளது. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள இருக்கும் மிர்ச்சி செந்தில், அதே நேரத்தில் நாம் இருவர் சீரியலிலும் தொடர்ந்து நடிக்க உள்ளார்.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்