மேலும் அறிய

அவ்வை சண்முகி ஷூட்டிங்.. நடிகர் கார்த்திக் நட்பு.. மணிவண்ணன் சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்!

மறைந்த இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தன்னுடைய திரை அனுபவங்களைப் பேசியுள்ள காணொளி ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மறைந்த இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தன்னுடைய திரை அனுபவங்களைப் பேசியுள்ள காணொளி ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் அவர் நடிகர் கமல்ஹாசனுடன் `அவ்வை சண்முகி’ படத்தில் நடித்த அனுபவங்கள், நடிகர் கார்த்திக் உடனான அனுபவங்கள் ஆகியவை குறித்து பேசியுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் `கமலைப் போல ஒரு dedicated actorரை நான் பார்த்தது இல்லை. அதிகாலை 3 மணிக்கு எழுந்துவிடுவார். ரப்பர் மாஸ்க் போட்டு, அது காயும் வரை ஸ்ட்ரா மூலமாக எதையாவது குடிப்பார்.. வாயை அசைத்தால் அவரது மேக்கப் உடைந்துவிடும்.. அதனால் அசைக்காமலே இருப்பார். 11 மணிக்கு அந்த மேக்கப் உடைய தொடங்கும். அதனால் அதற்குள் அனைத்து காட்சிகளையும் படமாக்க வேண்டும்.. நாங்களும் அவருக்கு ஒத்துழைக்கும் விதமாக நடித்துக் கொடுப்போம்.. அதையும் புரிந்துகொள்வார். எங்கள் பிரச்னை என்பது பெரிதே இல்லை. நாங்கள் நடித்தால் மட்டும் போதும். ஆனால் அவர் மேக்கப் அணிந்திருக்கிறார். அதைக் கவனிக்க வேண்டும். பெண் வேடம் போட்டிருக்கிறார். அந்த சிகையலங்காரத்தைக் கண்காணிக்க வேண்டும். அதோடு சேர்ந்து நடிக்க வேண்டும். நடிக்கும் போதும் சும்மா இருக்க முடியாது.. தன்னோடு நடிப்பவரையும் கவனிக்க வேண்டும்.. அதையும் செய்வார்.. இத்தனை வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடியவர் கமல் ஹாசன்’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் `அவரைக் காதலிக்கக்கூடிய வேடம் என்பது என் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல். இப்பவும் நிறைய ஊர்களுக்குப் பயணிக்கும் போது, `முதலியாரே’ என்பார்கள்.. அந்தப் பெயர் கிடைத்ததும் `அவ்வை சண்முகி’ படத்தின் மூலமாகத் தான். அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ் கண்ணா ஆகியோர் தான். ரமேஷ் கண்ணா அந்தப் படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். வழக்கமான சென்னை தமிழாக இல்லாமல், சென்னையில் வாழும் முதலியார்கள் பேசும் வட்டார வழக்கை எனக்கு அவர் கற்றுத் தந்தார். ரவிகுமார், ரமேஷ் கண்ணா, கமல் சார் ஆகிய மூவரும் தான் என்னை `அவ்வை சண்முகி’ படத்திற்காக தயார் செய்தனர். அந்தப் படம் இன்று மட்டுமல்ல, என்னால் எப்போதும் மறக்க முடியாத படம்.. இதற்காக அந்த மூவரிடமும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அவ்வை சண்முகி ஷூட்டிங்.. நடிகர் கார்த்திக் நட்பு.. மணிவண்ணன் சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்!

நடிகர் கார்த்திக் உடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்த மணிவண்ணன், `நடிகர் கார்த்திக்கோடு இணைந்து திரைப்பட இயக்கத்தில் ஈடுபட்டது குறைவு.. ஆனால் பல திரைப்படங்கள் அவரோடு நடித்திருக்கிறேன். அவரது முதல் படமான `அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் இருந்தே கார்த்திக் எனக்கு நன்கு பரிச்சயம். அவர் ஒரு மாதிரி ஜாலியான மனிதர். அகத்தியன் சார் படங்களில் காட்சியையும், அதன் அமைப்பையும் அவர் எங்களிடம் சொல்லி, ’நீங்கள் பேசிக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிடுவார். நாங்கள் இருவரும் பேசி பேசி காட்சியை உருவாக்கி விடுவோம்.. அகத்தியன் சார் ஷாட்களைப் பிரிப்பது, க்ரெக்‌ஷன் சொல்வது முதலானவற்றை மேற்கொள்வார். இருவரும் சேர்ந்து பணியாற்றுவது அவ்வளவு நன்றாக இருக்கும். `கோகுலத்தில் சீதை’ போன்ற திரைப்படங்கள் இருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒன்று’ என்று கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget