மேலும் அறிய

The Snoring Film: ஜெய்பீம் புகழ் மணிகண்டன் அடுத்து நடிக்கும் குறட்டை காமெடி படம்!

Actor Manikandan: ஜெய்பீம், சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மணிகண்டன், அடுத்து குறட்டை பிரச்சனை உள்ளவர்களுக்காக ஒரு படத்தில் நடிக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியாகி தமிழ் திரையிலகில் மட்டுமன்றி, இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் ஜெய்பீம். 1993 அம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், சூர்யா ஹீரோவாக நடிக்க, ஹீரோவை விட முக்கிய கதாப்பாத்திரமான நல்ல கண்ணு கேரக்டரில் நடித்திருந்தார் மணிகன்டன். ஜெய்பீம் படத்தில் போலீஸிடம் அடி வாங்கும் காட்சியிலும், கடைசியில் உயிர் நீத்தும் காட்சியிலும் பார்ப்பவர்களின் கண்களை கலங்க வைத்த நடிகர் இவர். 

ஜெய்பீம் படம் மட்டுமன்றி, இதற்கு முன் நடித்த படங்களிலும் முத்திரை பதிக்கும் கதாப்பாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். 2019ஆம் ஆண்டு வெளியான சில்லுக் கருப்பட்டி படத்தில் முகிலன் என்ற கதாப்பாத்திரத்தில் விரைச்சிரைப் புற்றுநோய் ஏற்பட்ட சாமான்யன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

முதல் படத்திலிருந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு சூப்பர் ஸ்டாருடன் காலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்னர் நடித்த படங்களில் சாதாராண கதாப்பாத்திரங்களில் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் அள்ளிய இவர், இப்படத்தில் கோபமும்  துடிப்பும் நிறைந்த இளைஞராக நடித்திருந்தார். இப்படி, நடித்த அனைத்து படங்களிலும் துணைக் கதாப்பாத்திரத்திலேயே வந்தாலும், மக்களின் மனங்களில் தன் பெயர் பதியும் அளவிற்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மணிகண்டன். இவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

‘குறட்டை’ படம்:

மணிகன்டன் அடுத்து, விநாயக் சந்திரசேகரன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதுவரை துணைக்கதாப்பாத்திரங்கிள் மட்டுமே நடித்து வந்த இவர், இப்படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். ஷான் ரொனால்ட் என்பவர் பின்னனி இசையமைக்க, மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ என்டர்டெயின்மன்ட் இப்படத்தை தயாரித்து வழங்குகிறது. இந்த புதிய படத்தில், மணிகன்டன், குறட்டை பிரச்சனை உள்ள நாயகனாக நடிக்கிறார். 


The Snoring Film: ஜெய்பீம் புகழ் மணிகண்டன் அடுத்து நடிக்கும் குறட்டை காமெடி படம்!

இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்தி பதிவில், “குறட்டை பிரச்சனையினால் தினசரி பலர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களது குமுரல்களை, இப்படம் வாயிலாக காமெடி வடிவல் சொல்ல முயற்சித்திருக்கிறோம். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

இப்படத்தில், முதல் நீ முடிவும் நீ படத்தில் நாயகியாக நடித்திருந்த மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும், சூது கவ்வும், டிமாண்டி காலணி உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கிய, ரமேஷ் திலக் முக்கிய கதாப்பாத்திரத்தில நடித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: அதிரடியாக ஆடும் பெங்களூரு; கட்டுப்படுத்துமா டெல்லி?
RCB vs DC LIVE Score: அதிரடியாக ஆடும் பெங்களூரு; கட்டுப்படுத்துமா டெல்லி?
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: அதிரடியாக ஆடும் பெங்களூரு; கட்டுப்படுத்துமா டெல்லி?
RCB vs DC LIVE Score: அதிரடியாக ஆடும் பெங்களூரு; கட்டுப்படுத்துமா டெல்லி?
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
Embed widget