மேலும் அறிய

Kota Srinivasa Rao: தள்ளாடியபடி ஓட்டு போட வந்த சாமி பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ்..ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆந்திராவில் இன்று மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் வாக்களிக்க வந்த வீடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிராணம் கீரகிடு என்ற தெலுங்கு படம் மூலம் 1978 ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானவர் கோட்டா சீனிவாச ராவ். அந்த திரையுலகில் பல படங்களில் வில்லனாக நடித்து மாஸ் காட்டிய அவர் 1987 ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார். 2003 ஆம் ஆண்டில் சாமி படம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கேரக்டர் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. தொடர்ந்து தமிழில் குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, ஜெய்சூர்யா, பரமசிவன், கொக்கி, சாது மிரண்டா, சத்யம், தனம், பெருமாள், லாடம், ஜெகன்மோகினி, பவானி, கோ, மம்பட்டியான், சகுனி, தாண்டவம், ஆன் இன் ஆல் அழகுராஜா, டமால் டூமில், மரகத நாணயம் என ஏகப்பட்ட படங்களில் வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். 

இதனிடையே 81 வயதாகும் கோட்டா சீனிவாச ராவ் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராக 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். அவருடைய கலைசேவையை பாராட்டி 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் ஆந்திராவில் இன்று மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. 

இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் காலையிலேயே வந்து தங்கள் ஜனநாயக கடமையாற்றியதோடு மட்டுமல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலானது. இப்படியான நிலையில் கோட்டா சீனிவாச ராவ் வாக்களிக்க வருகை தந்த வீடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். 

ஒரு காலத்தில் கம்பீரமான வில்லனாக வலம் வந்த அவர், இன்று நடக்க முடியாதபடி பிறரின் துணையோடு தள்ளாடியபடி வருகை தரும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Prajwal Revanna: பாலியல் சர்ச்சை - விமான நிலையத்தில் வைத்து நள்ளிரவில் பிரஜ்வல் ரேவண்ணா கைது
Prajwal Revanna: பாலியல் சர்ச்சை - விமான நிலையத்தில் வைத்து நள்ளிரவில் பிரஜ்வல் ரேவண்ணா கைது
PM Modi Video: பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
Heat Wave: சுட்டெரிக்கும் வெயில் - 2 மணிநேரத்தில் 16 பேர் பலியான சோகம் - பீகாரில் வெப்ப அலையின் கோரமுகம்
சுட்டெரிக்கும் வெயில் - 2 மணிநேரத்தில் 16 பேர் பலியான சோகம் - பீகாரில் வெப்ப அலையின் கோரமுகம்
Crime: சென்னை : திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி.. தோழிக்கு மெசெஜ் அனுப்பி விட்டு தற்கொலை
திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி.. தோழிக்கு மெசெஜ் அனுப்பி விட்டு தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Modi at Bhagavathy amman temple | ”தாயே வெற்றியை கொடு” பகவதி அம்மனிடம் உருகிய மோடிNivetha Pethuraj | ’’டிக்கிலாம் திறக்க ,முடியாது’’ வழிமறித்த போலீஸ் வாக்குவாதம் செய்த நிவேதாModi in Kanyakumari : 30 முதலை வீரர்கள்... கடலுக்கு அடியிலும் பாதுகாப்பு  பரபரப்பில் கன்னியாகுமரிModi vs Nitin Gadkari : நிதின் கட்காரியை தோற்கடிக்க சதி? பின்னணியில் மோடி - அமித்ஷா? புகைச்சலில் பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prajwal Revanna: பாலியல் சர்ச்சை - விமான நிலையத்தில் வைத்து நள்ளிரவில் பிரஜ்வல் ரேவண்ணா கைது
Prajwal Revanna: பாலியல் சர்ச்சை - விமான நிலையத்தில் வைத்து நள்ளிரவில் பிரஜ்வல் ரேவண்ணா கைது
PM Modi Video: பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
Heat Wave: சுட்டெரிக்கும் வெயில் - 2 மணிநேரத்தில் 16 பேர் பலியான சோகம் - பீகாரில் வெப்ப அலையின் கோரமுகம்
சுட்டெரிக்கும் வெயில் - 2 மணிநேரத்தில் 16 பேர் பலியான சோகம் - பீகாரில் வெப்ப அலையின் கோரமுகம்
Crime: சென்னை : திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி.. தோழிக்கு மெசெஜ் அனுப்பி விட்டு தற்கொலை
திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி.. தோழிக்கு மெசெஜ் அனுப்பி விட்டு தற்கொலை
Rasipalan: மிதுனத்துக்கு பெருமை... கடகத்துக்கு விவேகம்....இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Rasipalan: மிதுனத்துக்கு பெருமை... கடகத்துக்கு விவேகம்....இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Travel With ABP: செங்கல்பட்டு மாவட்டத்தில் கம்மி பட்ஜெட்டில், பார்க்கவேண்டிய ஜோரான இடங்கள்..
Travel With ABP: செங்கல்பட்டு மாவட்டத்தில் கம்மி பட்ஜெட்டில், பார்க்கவேண்டிய ஜோரான இடங்கள்..
காஞ்சிபுரம்,  சென்னை, செங்கல்பட்டு  இன்றைய வானிலை நிலவரம் என்ன? வெப்பத்திலிருந்து விடுதலை கிடைக்குமா ?
காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு இன்றைய வானிலை நிலவரம் என்ன? வெயில் குறையுமா?
Advance Tax: அட்வான்ஸ் டேக்ஸ் பற்றி தெரியுமா? எப்போது செலுத்த வேண்டும்? ஆன்லைனில் செலுத்துவது எப்படி?
Advance Tax: அட்வான்ஸ் டேக்ஸ் பற்றி தெரியுமா? எப்போது செலுத்த வேண்டும்? ஆன்லைனில் செலுத்துவது எப்படி?
Embed widget