மேலும் அறிய

எவ்வளவு ஜெயித்தாலும் தோல்வியைப் பற்றிதான் பேசுவார்கள்...வா வாத்தியார் பட விழாவில் கார்த்தி

Vaa Vaathiyaar : வா வாத்தியார் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் கார்த்தி பகிர்ந்துகொண்டார்

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். க்ரித்தி ஷெட்டி , சத்யராஜ் , ராஜ்கிரண் , ஆனந்தராஜ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது

9 வருடம் கழித்து படம் எடுக்கிறார் என பில்டப் போஸ்ட் எல்லாம் பார்த்தேன். ஆனால் நியாயமாய் நீங்கள் பயப்பட வேண்டும். இவ்வளவு வருடம் படமெடுக்காமல் படமெடுக்க வருகிறானே என யோசிக்க வேண்டும். சூது கவ்வும் படமெடுத்த போது, எஸ் ஆர் பிரபு ரொம்ப வருத்தப்பட்டார், சிவக்குமார் ஐயாவும் ரொம்பவும் வருத்தப்பட்டார். இப்படி தலைப்பு வைத்துப் படமெடுக்கலாமா? எனக் கேட்டார்கள், அது வெறும் கிண்டல் தான் என்றேன், இருந்தாலும் அப்போது ஒரு வாக்குறுதி தந்தோம். தர்மம் வெல்லும் என ஒரு படமெடுப்போம் என சொன்னேன். அது தான் இந்தப்படம். இந்தப்படம் எடுக்க வாய்ப்பு தந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆருக்கு கோடான கோடி நன்றி. ஞானவேல் ராஜா, கார்த்தி இருவருக்கும் நன்றி. கார்த்தி மிக அழகாக கதாப்பாத்திரத்தில் பொருந்திப்போய்விட்டார். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். எம் ஜி ஆருக்கு ஒரு அர்ப்பணிப்பு தான் இந்தப்படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 

நடிகர் கார்த்தி பேசியதாவது

நலன் சொன்னது போலத் தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் என ஒரு படம் செய்து விட்டு, 10 வருடம் கழித்து தர்மம் வெல்லும் எனப் படம் செய்துள்ளார். நலனுக்கு தான் நிறைய இயக்குநர்களே ரசிகர்களாக இருக்கிறார்கள்.  எங்கு சென்றாலும் நலன் உடன் படம் செய்கிறீர்களா என ஆவலாகக் கேட்பார்கள். அவர் எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்து விடுகிறார். அரசியல்வாதியைக் கடத்துவது போல ஒரு கதை சொல்வார் என நினைத்தால் வா வாத்தியார் கதை சொன்னார். இது எப்படி நம்மால் செய்ய முடியும் என பயமாக இருந்தது. எவ்வளவு ஜெயித்தாலும் நாம் தோற்றதைப் பற்றித்தான் பேசுவார்கள் அதனால் துணிந்து செய்து விட வேண்டும் என ஒத்துக்கொண்டேன்.

நலன்  70, 80 கமர்ஷியல் படங்களுக்கு அர்ப்பணிப்பாக இப்படத்தைச் செய்துள்ளார். இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது. அவர் தன் ஆளுமையை மக்கள் மத்தியில் நல்லவிதமாகக் கொண்டு சேர்த்தவர். அவர் படங்களில் தம்மடிக்க மாட்டார் தண்ணியடிக்க மாட்டார் அதை தன் ரசிகர்களும் சொல்லிக்கொடுத்து அப்படியே இருக்கச் செய்தவர். எப்படி இப்படி  ஒரு மனிதர் இருந்தார்  என வியக்க வைத்தவர். “இருந்தாலும் பிரிந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,  இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என பாடி வைத்து விட்டு போய் விட்டார். இன்று சென்னை ரயில் நிலையத்தில் 5000 முறை அவர் பேர் சொல்கிறார்கள். இன்றும் அவர் பற்றி பேசுகிறோம்.  அவர் ரசிகர்கள் அன்புடன்,  அவர் ரசிகர்களின் அன்பிற்கான கடனாகவே ரசிகர்களுக்காகத் தான் இந்தப்படத்தில் நடித்தேன்.  

நலன் அவரைப்பற்றி பெரிய ஆராய்ச்சி செய்து படம் எடுத்துள்ளார். 90 கிட்ஸ் சொல்வது போல நலன் யாருனு இந்தப்படம் வந்த பிறகு தெரியும். மலையாளம் போல நம் தமிழ் சினிமாவில் இல்லையே எனத் தோணும். நாமும் புதிதாக முயற்சிக்க வேண்டும். அதற்கு நலன் மாதிரி இயக்குநர் வேண்டும்.  இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். ஒவ்வொருவரும் அவ்வளவு கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் மாமா திரும்பவும் ஸ்பெஷலாக  மொட்டை பாஸாக நடித்துள்ளார்.  ராஜ்கிரண் ஒரு எம் ஜி ஆர் பக்தராக நடித்துள்ளார். கிருத்திக்கு முதல் தமிழ்ப்படம் சூப்பராக நடித்துள்ளார். சந்தோஷ் சூப்பரான இசையைத் தந்துள்ளார். எல்லோரும் பெரும் உழைப்பைப் போட்டு உருவாக்கியுள்ள படம். நம் தமிழ் சினிமாவுக்கு பெருமையாக இந்தப்படம் இருக்கும். ஞானவேலுக்கு இந்தப்படம் பெரிய லாபம் தரக்கூடிய படமாக வெற்றியைத் தரட்டும். புரட்சித் தலைவரின் ஆசியுடன் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
Embed widget