மேலும் அறிய

Kamal Haasan : இந்தியன் 2 படக்குழுவுக்கு விருந்து சமைத்து அனுப்பிய தக் லைஃப் நடிகர்! குஷியான கமல்

இந்தியன் 2 படத்திற்காக கேரளா சென்ற படக்குழுவினருக்கு நடிகர் ஜோஜூ ஜார்ஜ் விருந்து சமைத்து அனுப்பியது ரசிகர்களை கவர்ந்துள்ளது

இந்தியன் 2 

கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இறுதிகட்டமாக படக்குழு கேரளாவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் , சித்தார்த் , பாபி சிம்ஹா , மற்றும் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். 

இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசினார் கமல். அவர் பேசுகையில்  ‘ ஒவ்வொரு முறையும் நான் கேரளா வரும்போது நாஸ்டால்ஜிக் ஆகிவிடுகிறேன். எனக்கு இங்கு நிறைய நடிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இருக்கிறார்கள். என்னை செதுக்கியதில் கேரளாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. நான் ஒரு பொருளாக இருந்தால் அதில் மேட் இன் கேரளா என்று தான் போட்டிருக்கும் . நான் தமிழ் நாட்டிற்கு மட்டும் சொந்தமானவன் இல்லை. அதனால் தான் நான் இன்று பான் இந்திய நடிகராக இருக்கிறேன்” என்று கமல் தெரிவித்தார்.

கேரள கலைஞர்களை பெருமையாக பேசிய கமல் 

இந்தியன் 2 படத்தில் சேனாதிபதி கேரக்டருக்கு மேக் அப் போட்டு நடித்தது குறித்து பேசிய கமல் “ கேரளாவில் தெய்யம்  நடனக் கலைஞர்களுக்கு பொறுமையாக நீண்ட நேரம் ஒப்பனை செய்துகொள்வதில் இருக்கும் சிரமம் நன்றாகவே தெரியும் என்று பேசினார்.

இந்தியன் படக்குழுவுக்கு விருந்து வைத்த ஜோஜூ ஜார்ஜ்

View this post on Instagram
 
A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

கேரளாவில் ப்ரோமோஷனிற்காக சென்றிருந்த இந்தியன் 2 படக்குழுவினருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பைக் கொடுத்துள்ளார்கள். கேரள திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் கமலை சிறப்பான வரவேற்த்துள்ளார்கள். மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தனது இல்லத்தில் சமைத்த உணவை படக்குழுவினருக்கு கொடுத்து அனுப்பியுள்ளார். இதனை கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கமல் , சித்தார்த் , பாபி சிம்ஹா , ஜோஜூ ஜார்ஜ் , மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள்.

தக் லைஃப்

நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து வந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் காட்சியில் ஜோஜூ ஜார்ஜ் தவறி விழுந்தார் . இதனால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது ஜோஜூ ஜார்ஜ் கொச்சியில் தனது இல்லத்தில் ஓய்வுபெற்று வருகிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
Pakistan Train: முடிவுக்கு வந்த ரயில் கடத்தல் - உயிர் தப்பிய 340 பயணிகள் - துப்பாக்கிகளால் பறிபோன  உயிர்கள்
Pakistan Train: முடிவுக்கு வந்த ரயில் கடத்தல் - உயிர் தப்பிய 340 பயணிகள் - துப்பாக்கிகளால் பறிபோன உயிர்கள்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
Pakistan Train: முடிவுக்கு வந்த ரயில் கடத்தல் - உயிர் தப்பிய 340 பயணிகள் - துப்பாக்கிகளால் பறிபோன  உயிர்கள்
Pakistan Train: முடிவுக்கு வந்த ரயில் கடத்தல் - உயிர் தப்பிய 340 பயணிகள் - துப்பாக்கிகளால் பறிபோன உயிர்கள்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Embed widget