மேலும் அறிய

Jiiva : திருச்செந்தூர் சுப்ரமணியசாமி தரிசனம் செய்த நடிகர் ஜீவா..பிளாக் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி

தான் நடித்த பிளாக் படம் வெற்றிபெற்றதால் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் நடிகர் ஜீவா

ஜீவா

தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை கொடுத்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரியின் இளைய மகன் ஜீவா. திரைத்துறையில் பெரிய குடும்ப பிண்ணனி இருந்தாலும் தான் நடித்த படங்களாலும் தனது நடிப்பாலும் ஒரு சிறந்த நடிகர் என்கிற பெயர்பெற்றவர் ஜீவா. தமிழில் தித்திக்குதே படத்தின் வழியாக நாயகனாக அறிமுகமான ஜீவா ஒரே டிராக்கில் செல்லாமல் தனது நடிப்பு திறமைக்கு சவால் விடும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார்.  ஒரு பக்கம் கற்றது தமிழ் , ராம் , ஈ , உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் இன்னொரு பக்கம் சிங்கம் புலி , சிவா மனசுல சக்தி , போன்ற கமர்ஷியல் ரீதியாக வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஜீவா நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி காணவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் சமீபத்தில் வெளியான பிளாக் திரைப்படம் அவருக்கு அந்த வெற்றியைக் கொடுத்துள்ளது.

திருச்செந்தூர் சாமி தரிசனம் செய்தார் ஜீவா

நடிகர் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள புதிய படம் பிளாக் . கே.ஜி பாலசுப்ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷா ரா, ஸ்வயம் சித்தர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. பெரியளவில் ப்ரோமோஷன் ஏதும் இல்லாமல் வெளியான ப்ளாக் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு ரசிகர்களின் வரத்தும் அதிகரித்து படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றுள்ளது.

பிளாக் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜீவா நேற்று அக்டோபர் 29 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றார். சுப்ரமணிய சுவாமி தரிசம் செய்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் " என்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் நான் இங்கு வருவேன். ராம் , கோ படத்திற்கு நான் வந்திருந்தேன். பிளாக் படத்தின் வெற்றிக்காக இப்போது வந்திருக்கிறேன். உண்மையாகவே ரொம்ப சந்தோஷம். இங்கு இருக்கு அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமோக தரிசனம் செய்தோம் . மன நிறைவோடு திரும்பி செல்கிறோம்" என ஜீவா தெரிவித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kohli RCB IPL: போட்றா வெடிய..! கோலி ரசிகர்கள் கொண்டாட்டம், மீண்டும் பெங்களூர் அணி கேப்டனாகவுள்ளதாக தகவல்

TN Rain Alert: தமிழ்நாட்டிற்கு நாளை தீபாவளி இருக்கா? குறிவைத்து அடிக்கும் கனமழை -  சென்னை வானிலை மையம் சொல்வது என்ன?

Chennai Rains: சென்னையில் செம மழை! திடீரென இடி, மின்னலுடன் கொட்டித் தீர்ப்பதால் மக்கள் அவதி!

Breaking News LIVE 30th OCT 2024: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

ABP Premium

வீடியோ

Udhayanidhi wishes Ajith : ”ஒன்றிணைந்து செயல்படுவோம்” அஜித்தை அழைத்த உதயநிதி!கொண்டாடும் AK ரசிகர்கள்Annapoorani Arasu Amma : லிஸ்ட் பெருசா போகுதே 3வது திருமணத்திற்கு ரெடியான சர்ச்சை சாமியார் அன்னபூரணிPinarayi Vijayan Accident : விபத்தில் சிக்கிய பினராயி ஒன்றோடு ஒன்று மோதிய கான்வாய் பரபரப்பான கேரளாTeacher Slaps Student : மாணவியை தாக்கிய TEACHER நடுரோட்டில் நடந்த கொடூரம் அதிரடி காட்டிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kohli RCB IPL: போட்றா வெடிய..! கோலி ரசிகர்கள் கொண்டாட்டம், மீண்டும் பெங்களூர் அணி கேப்டனாகவுள்ளதாக தகவல்
Kohli RCB IPL: போட்றா வெடிய..! கோலி ரசிகர்கள் கொண்டாட்டம், மீண்டும் பெங்களூர் அணி கேப்டனாகவுள்ளதாக தகவல்
TN Rain Alert: தமிழ்நாட்டிற்கு நாளை தீபாவளி இருக்கா? குறிவைத்து அடிக்கும் கனமழை -  சென்னை வானிலை மையம் சொல்வது என்ன?
TN Rain Alert: தமிழ்நாட்டிற்கு நாளை தீபாவளி இருக்கா? குறிவைத்து அடிக்கும் கனமழை - சென்னை வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Rains: சென்னையில் செம மழை! திடீரென இடி, மின்னலுடன் கொட்டித் தீர்ப்பதால் மக்கள் அவதி!
Chennai Rains: சென்னையில் செம மழை! திடீரென இடி, மின்னலுடன் கொட்டித் தீர்ப்பதால் மக்கள் அவதி!
Breaking News LIVE 30th OCT 2024: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
Breaking News LIVE 30th OCT 2024: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
Nayanthara: நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோ; எப்போது தெரியுமா?
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோ; எப்போது தெரியுமா?
Happy Diwali 2024: இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்தை கண்டு ரசிக்க சிறந்த இடங்கள் -  டாப் 5 பெஸ்ட் லொகேஷன் இதோ..!

Vijay VS Udhay: அஜித்திற்கு உதயநிதி திடீர் வாழ்த்து! விஜய்க்கு எதிரான வியூகம் கைகொடுக்குமா?

Benz: இன்ப அதிர்ச்சி! LCU-வில் ராகவா லாரன்ஸ்! ரோலக்ஸிற்கே டஃப் கொடுப்பாரா பென்ஸ்?

Embed widget