மேலும் அறிய

Actor Jiiva: திரைப்படமாக உருவாகும் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு...ஹீரோவாக நடிக்கும் ஜீவா...

நடிகர் ஜீவா கடந்தாண்டு காஃபி வித் காதல், வரலாறு முக்கியம் ஆகிய படங்களில் ஹீரோவாகவும், நித்தம் ஒரு வானம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார்.

ஆந்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வரலாறு

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சராக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி “யாத்ரா” என்ற படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. மஹி ராகவ் இயக்கிய இப்படத்தில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார். தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது. 

ஜெகன் மோகன் ரெட்டி வரலாறு

இதன் 2ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் மஹி அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்றது. ‘யாத்ரா-2’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையானது படமாக்கப்பட உள்ளது. அவரின் இளமை காலம் முதல் ஆந்திர முதலமைச்சர் ஆனது வரை இதில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. 

ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், இந்த படத்தை மக்களின் பார்வைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.முதல் பாகத்தில் அப்பா ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மம்மூட்டி நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கேரக்டரில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.


Actor Jiiva: திரைப்படமாக உருவாகும் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு...ஹீரோவாக நடிக்கும் ஜீவா...

இந்த நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியாக நடிக்க சூர்யா பெயர் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தங்களை யாரும் அணுகவில்லை என சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  நடிகர் ஜீவாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில்  ஜீவா தான் ஜெகன் மோகனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  விரைவில்  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது என்றும், திரைக்கதை தயாராகி விட்டதால் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, 

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயர்களில் ஒருவராக வலம் வரும்  ஜீவா கடந்தாண்டு காஃபி வித் காதல், வரலாறு முக்கியம் ஆகிய படங்களில் ஹீரோவாகவும், நித்தம் ஒரு வானம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிகர் ராஷிகண்ணாவுடன் அவர் இணைந்து நடிக்க உள்ளார். இந்நிலையில் ஆந்திர முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜீவா நடிக்க உள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க: Naga Chaitanya : எனக்கு பிடிக்காத வார்த்தை 'நட்பு'... கிஸ் கொடுத்ததை கவுண்ட் வைக்கல... கடுப்பில் கொந்தளித்த நாக சைதன்யா

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget