மேலும் அறிய

Jayaram speech: எனக்கு ட்ரஸ்சே கொடுக்கல.. மேடையில் புலம்பிய நடிகர் ஜெயராம்.. பொன்னியின் செல்வன் ஷேரிங்ஸ்..!

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் தனக்கு ட்ரஸ்சே கொடுக்கவில்லை என நடிகர் ஜெயராம் பேசியிருக்கிறார்.

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் தனக்கு ட்ரஸ்சே கொடுக்கவில்லை என நடிகர் ஜெயராம் பேசியிருக்கிறார். 

சென்னையில்  ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாடலான  ‘பொன்னி நதி’ பாடல் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில்  நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய ஜெயராம், “இந்த மாதிரி அற்புதமான படத்தில் அதனுடைய ஒரு சின்ன பகுதியாக நான் இருந்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப பெருமை. பொன்னியின் செல்வன் ஒவ்வொரு தமிழனின் ஆழப்பதிந்த திரைக்கதை. எனக்கு இந்த ட்ரஸ்சே நிகழ்ச்சிக்காக கொடுத்தார்கள். ஆனால் படத்தில் எனக்கு ட்ரஸ்சே கொடுக்கல.

 

                                     

அதனால புரோமோஷனுக்காகவாது ஒன்று கொடுங்கள் என்று வாங்கி வந்தேன். தாய்லாந்தில் 3.30 மணிக்கு ஷூட்டிங் கிளம்பணும். 18 மணி நேரம் ஷூட்டிங் முடிச்சுட்டு வந்தா, அப்பதான் மணிசார் நாளைக்கு பேர் பாடி சீன் இருக்கு என்று சொல்வார். உடனே கார்த்தியும், ரவியும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.” என்று பேசினார்.

 


Jayaram speech: எனக்கு ட்ரஸ்சே கொடுக்கல.. மேடையில் புலம்பிய நடிகர் ஜெயராம்.. பொன்னியின் செல்வன் ஷேரிங்ஸ்..!

தொடர்ந்து மக்களிடமும் அவர்கள் உரையாடினர். அப்போது மேடைக்கு வந்த சினேகா என்பவர் பேசும் போது வந்திய தேவன் பல நாடுகளுக்கு ஓலை எடுத்து சென்றிருக்கிறார். ஆனால் இங்கு நான் அவருக்கு ஓலை எடுத்து வந்திருக்கிறேன் என்று படிக்க ஆரம்பித்தார். 

காதல் ஓலை 

கரிகாலன் சோழனாய், காவேரியை தேடிவந்து, கடம்பூர் மாளிகைக்குள் காட்சியினை மறைந்திருந்து, குழந்தையில் ஜோதிடம் அறிய சென்று பெண்களின் கண்ணசைவில் மெய்மறந்து நின்று காதலில் விழுந்த வந்தியதேவனை நான் உங்களை காதலிக்கிறேன்” என்று சொன்னார். உடனே கார்த்தி லல் யூ என்று சொல்ல சினேகாவும் லவ் யூ என்று சொன்னார்.  

உளமாற காதலிக்கிறேன்.

தொடர்ந்து ஜெயம் ரவியிடம் சென்ற அவர், படை பல கண்டு, தடை பல கடந்து, மூன்றாவது வல்லாதிக்கத்தை நிறுவி உலகை ஆண்டு, உலகை வியக்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டி, அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தின் மாமான்னரான  அருண்மொழிதேவரே உங்களை உளமாற காதலிக்கிறேன்.” என்றார். தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி உங்கள் அன்புக்கு நன்றி என்றார். 

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள  ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது. தமிழ்நாடு தாண்டி பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூலை மாதம் தொடங்கி பொன்னியின் செல்வன் பட அப்டேட்களை தொடர்ந்து வழங்கி படக்குழு மகிழ்வித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலை இன்று வெளியிட்டது. 

கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழர்களின் பொற்கால வரலாற்றை வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சொல்வது போல ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து சோழர் காலத்தைப் பற்றி பல தகவல்கள் அடங்கிய வீடியோவும், அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழனாக மாறினார் என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோவும்  முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம்  டீசர் வெளியிட்டு விழாவும் அன்றைய தினம் பிரமாண்டமாக சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இந்நாவலை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க  3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.

 

 

தலைப்பு செய்திகள்

Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Chennai Power Cut: சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
Embed widget