Jayam Ravi : புறநாநூறு அவ்ளோதானா ? இருங்க பாய்...சிவகார்த்தியேன் படத்தில் வில்லனாக களமிறங்கும் ஜெயம் ரவி
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புறநாநூறு படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சிவகார்த்திகேயன்
அமரன் படத்தின் வெற்றிக்குப் பின் சிவகாத்திகேயனுக்கு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் பெரிய மார்கெட் ஓப்பனாகியுள்ளது என்று சொல்லலாம். இனி அவர் நடிக்கும் படங்களுக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு இருக்கும் என சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள். அடுத்தபடியாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே 23 படமும் அமரன் படத்தைப் போல ப்ளாக்பஸ்டர் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். தொடர்ந்து அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க இருக்கிறார். அதில் ஒன்றுதான் சுதா கொங்காரா இயக்கவிருக்கும் புறநாநூறு
புறநாநூறு
முன்னதாக சூர்யா , துல்கர் சல்மான் , நஸ்ரியா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்க இருந்தார்கள். பின் வெளியே சொல்லாத காரணங்களால் இப்படத்தில் இருந்து அத்தனை நடிகர்களும் விலகினார்கள். பின் சிவகாத்திகேயன் இப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இந்த தகவலை நிகழ்ச்சி ஒன்றில் உறுதிபடுத்தினார். புறநாநூறு சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
சிவகார்த்தியேனுக்கு வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி
இந்த தகவலின் படி இப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரியவந்துள்ளது. ஜெயம் ரவி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிப்பதற்கான சாத்தியங்கள் அதிகமிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான படங்கள் பெரியளவில் வெற்றியடையவில்லை. இதனால் தனது கரியரில் புதிய முயற்சிகளை ஜெயம் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
Rumour : #JayamRavi plays villain role in #Sivakarthikeyan - #SudhaKongara Film🔥😦 pic.twitter.com/0f44dagSZz
— Akshay S (@Akshayyes2001) November 20, 2024