மேலும் அறிய

ஒரே படத்தில் அறிமுகமான இரு நடிகர்கள்..ஒருவருக்கு 120 கோடி சம்பளம்..இன்னொருவர் மரணப் படுக்கையில்

கல்லீரல் பாதிப்பால் மருத்துமமனையில் போராடி வரும் நடிகர் அபிநயின் மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் தனுஷ் நிதி கொடுத்து உதவியுள்ளார்

துள்ளுவதோ இளமை அபிநய்

நடிகர் தனுஷ் நாயகனாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து கவனமீர்த்தவர் நடிகர் அபிநய். இவர் கல்லீரல் பாதிப்பால் சில காலமாக தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு ரு 27 லட்சம் தேவைப்படும் நிலையில் ஒரு சில மட்டும் அவருக்கு பண உதவி செய்துவந்தனர். நடிகர் பாலா அபிநயின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ 1 லட்சம் வழங்கினார். ஆனால் முன்னணி நடிகர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வராதது குறித்து பல தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். குறிப்பாக அபிநயுடன் இணைந்து நடித்த தனுஷ் அவருக்கு ஏன் உதவ முன்வரவில்லை என பலர் கேள்வி எழுப்பினர்.  இப்படியான நிலையில் அபிநயின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ 5 லட்சம் வழங்கியுள்ளார் தனுஷ். அவரது இந்த செயல் பலரிடம் கவனமீர்த்துள்ளது

 

ஒரே படத்தில் அறிமுகமான இரு நடிகர்கள்

தனுஷ் மற்றும் அபிநய் இருவரும் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர்கள். இப்படம் வெளியானபோது அபிநய் தான் நாயகனாக நடித்திருக்க வேண்டும் தனுஷை ஏன் நடிக்க வைத்தார்கள் என பத்திரிகைகளில் கருத்துக்கள் வெளியாகின. அடுத்தடுத்து ஜங்ஷன் , சிங்கார சென்னை , பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார் அபிநய். மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றி அபிநய்க்கு கிடைக்கவில்லை. நடிப்பு தவிர்த்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல படங்களில் டப்பிங் பேசியுள்ளார். பெரியளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்ததாக அபிநய் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சரியான கதைகளை தேர்வு செய்யாதது, தொடர் தோல்விகள்,  அம்மாவின் இறப்பு , என அபிநய் வாழ்க்கையில் தொடர் போராட்டங்களை சந்தித்து வந்துள்ளார். இப்படியான நிலையில் தான் அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு உடல் மெலிந்த நிலையில் போராடி வருகிறார். 

ஒரே படத்தில் இருவரும் அறிமுகமானாலும் நடிகர் தனுஷ் இன்று ரூ 120 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். உலகளவில் அறியப்படும் பெரிய ஸ்டாராக இருக்கிறார் தனுஷ். மறுபக்கம் மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் உயிர் போனாலும் பரவாயில்லை என்கிற நிலையில் அபிநய். சினிமாவில் இந்த மாதிரியான சூழ் நிலைகள் எதார்த்தமான ஒன்றாகவே கருதப்படுகிறது என்றாலும் திரைத்துறையின் மேல் ஆர்வம் ஏற்பட்டு வரும் பலரது சொல்லாத தவிப்புகளுக்கு அபிநய் சான்று. 

 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget