மேலும் அறிய

Dhanush : போயஸ் கார்டன் வீடு மேட்டர்...மீம்கள் குறித்து நடிகர் தனுஷ் விளக்கம்

தனுஷ் போயஸ் கார்டன் வீடு வாங்கியது குறித்து பேசியது சமூக வலைதளத்தில் மீம்ஸ் பகிரப்பட்டது குறித்து நடிகர் தனுஷ் கர படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசியுள்ளார்

தனுஷ் நடித்துள்ள கர படத்தின் இசை வெளியீட்டு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய தனுஷ் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக வடசென்னை 2 படத்தின் அப்டேட் கொடுத்தார். இதுதவிர்த்து போயஸ் கார்டனில் வீடு வாங்கியது பேசியதற்காக தான் ட்ரோல் செய்யப்பட்டது குறித்து தனுஷ் இந்த நிகழ்ச்சியில் விளக்கமளித்தார். 

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இபப்டத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொதுவாக தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் தன் மீதான விமர்சனங்கள் குறித்து ஓப்பனாக பேசுவார். அப்படி அவர் தான் போயஸ் கார்டனில் வீடு வாங்கியது குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசியிருந்தார். 'நான் எல்லாம் போயஸ் கார்டரில் வீடு வாங்க கூடாதா' என தனுஷ் பேசியது சமூக வலைதளங்களில் மீம்களாக பகிரப்பட்டன. இதுகுறித்து கர படத்தின் இசை வெளியீட்டில் தனுஷ் ஓப்பனாக பேசினார் 

குட்டி கதை சொன்ன தனுஷ் 

போயஸ் கார்டனின் வீடு பற்றி பேசியது ட்ரோல் செய்யப்பட்டது குறித்து பேசிய தனுஷ் " அதை எப்படி எடுத்துக்கனும் என்பது நம்ம கிட்டதான் இருக்கு. ஒரு குட்டி கத சொல்றேன். நான் ஏர்போர்டில் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது அந்த டிரைவர் என்னிடம் செல்ஃபீ கேட்டார். . ஃபோட்டோ எடுத்தபின் தான் யாரிடமும் செல்ஃபீ கேட்டதில்லை நீங்கள் போயஸ் கார்டனில் வீடுவாங்கியது குறித்து பேசியது என் மகனுக்கு ரொம்ப பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது சார் என்றார். அதனால் நீங்க மீமாக பார்த்தால் மீம். இன்ஸ்பிரேஷனாக பார்த்தால் இன்ஸ்பிரேஷன். அதுவும் ஒரு என்டர்டெயின்மெண்ட் தான . என்டர்டெயின்மெண்ட் தான நம்ம வேல" என தனுஷ் பேசினார் 

வடசென்னை 2

வடசென்னை 2 குறித்து பேசுகையில் " எப்படியும் நீங்கள் என்னிடம் அடுத்தபடியாக வடசென்னை 2 பற்றி தான் கேட்பீர்கள். அதனால் நானே சொல்லிவிடுகிறேன். வடசென்னை 2 வரும் . சீக்கிரமாக வரும் நீங்கள் நினைக்கும் தூரவில்லை. அன்புவின் எழுச்சி பெரிதாக இருக்கும் . " என தனுஷ் தெரிவித்தார்

Advertisement

தலைப்பு செய்திகள்

குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
JIO Teaser: சைடு கேப்பில் முதல்வர் விஜயை வம்பிழுத்த ஜீவா.. ஜியோ படத்தின் டீசர் இதோ!
JIO Teaser: சைடு கேப்பில் முதல்வர் விஜயை வம்பிழுத்த ஜீவா.. ஜியோ படத்தின் டீசர் இதோ!
தனுஷ் படத்திற்கு 'ஓம்' டைட்டில் வைத்த காரணம் என்ன?இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்
தனுஷ் படத்திற்கு 'ஓம்' டைட்டில் வைத்த காரணம் என்ன?இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்
கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!
கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tata SUV: EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Compact EV: மூன்று SUV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் EV - தேறுமா?
மூன்று EV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் SUV - தேறுமா?
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
Embed widget