மேலும் அறிய

தியேட்டரில் திருவிழாதான்! கோலிவுட்டுக்கு ராயன், ஹாலிவுட்டுக்கு டெட்பூல் அண்ட் வொல்வெரின் - டபுள் டமாக்கா!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தனுஷின் ராயன் மற்றும் ஹாலிவுட் திரைப்படமான டெட்பூல் அண்ட் வோல்வெரின் நாளை வெளியாகிறது.

சினிமா ரசிகர்களுக்கு வாரந்தோறும் புதுப்படங்கள் வெளியாகி விருந்தாக அமைகிறது. கோலிவுட்டைப் பொறுத்தவரை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை என்றாலே புதுப்படங்கள் வெளியீடாகவே அமைகிறது.

அந்த வகையில், வெள்ளிக்கிழமையான நாளை தமிழ் சினிமாவின் மிகப்பெரிய படமான ராயன் வெளியாகிறது.

ராயன்:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் பவர் பாண்டி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். தற்போது அவர் இரண்டாவது முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ராயன்.

ராயன் படத்தில் நடிகர் தனுஷூடன் செல்வராகவன், சந்தீப்கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் என பலரும் நடித்துள்ளனர். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் மிரட்டியுள்ளார். இந்த படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

டெட்பூல் அண்ட் வோல்வெரின்:

உலகெங்கும் அதிகளவு ரசிகர்களை கொண்டது மார்வெல். மார்வெலின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் எக்ஸ் மேன் மற்றும் டெட்பூல் கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்த படத்தில் எக்ஸ் மேனாக ஹியூஜ் ஜேக்மேன், டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் நடித்துள்ளனர். இந்த படத்தை ஷாவ்ன் லேவி இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்திற்கு பிறகு வெளியான மார்வெல் படங்களில் ஓரிரு படங்களுக்கு மட்டுமே வரவேற்புகள் இருந்தது. இந்த சூழலில், அனைத்து மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளது.

சட்னி சாம்பார்:

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ராதாமோகன். இவரது இயக்கத்தில் வெளியான மொழி, அபியும் நானும் திரைப்படங்கள் ரசிகர்கள் மனதிற்கு எப்போதும் நெருக்கமானது ஆகும். இந்த நிலையில் ராதாமோகன் இயக்கியுள்ள வெப்சீரிஸ் சட்னி சாம்பார். இதன் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது.

சட்னி சாம்பார் வெப்சீரிஸில் முதன்மை கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். வாணி போஜன், சந்திரன், நிதின் சத்யா, இளங்கோ குமரவேல், மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர்.

ராயன் மற்றும் டெட்பூல் இரண்டு படங்களுக்குமே தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget