Asuran | 'அசுரன்’ பட அசுர நடிப்புக்காக மேலும் ஒரு அவார்டை அள்ளிய தனுஷ்...
BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா & தென்னாப்பிரிக்கா) சர்வதேச திரைப்பட விழாவில் அசுரனில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
கடந்த 2019 ம் ஆண்டு வெளிவந்த படங்களில் சிறந்த தமிழ் படமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எளிய மக்களின் வாழ்க்கை கதையை கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் தன் பக்கம் கவனம் ஈர்த்த இந்த அசுரன் திரைப்படம், வசூல் ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்றது. தனுஷ் இதுவரை நடித்த சிறந்த திரைப்படங்களில் இந்த திரைப்படமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது - அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டதுhttps://t.co/wupaoCQKa2 | #NationalFilmAwards | #Dhanush | #Asuran | #VetriMaaran | @dhanushkraja pic.twitter.com/spRFZoA3MT
— ABP Nadu (@abpnadu) October 25, 2021
இந்தநிலையில், கடந்த மாதம் நடைபெற்ற தேசிய விருது விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அசுரன் படத்திற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் வெற்றிமாறனும் விருதுகளை பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கினார்.
கோவாவில் நடைபெற்ற 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் (IFFI) நடத்தப்பட்ட BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா & தென்னாப்பிரிக்கா) சர்வதேச திரைப்பட விழாவில் அசுரனில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல மொழி படங்களும் திரையிடப்பட்டு, பல கலைஞர்களுக்கும் விருது வழங்கிய நிலையில் தனுஷிற்கு இவ்விருது வழங்கப்பட்டது தமிழ் திரையுலகை பெருமையடைய செய்துள்ளது.
முன்னதாக, ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் திரையிடப்பட்டது. அதன்பிறகு சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கலை இயக்குநர் உள்ளிட்டப் பல பிரிவுகளில் அசுரன் படம் விருதுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்