Watch Video : அரைகுறை ஆடையோடு படம் பார்த்த கூல் சுரேஷ்...அந்த கருமத்த நீங்களே பாருங்க
மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் படம் பார்க்க கூல் சுரேஷ் அநாகரிகமான ஆடையில் வந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

சுமோ
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் 'சுமோ' படம் இன்று ஏப்ரல் 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. சிவாவுடன் காசேதான் கடவுளடா, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்த பிரியா ஆனந்த் பிரியா ஆனந்த் இப்படத்தில் நடித்துள்ளார. . நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் படம் இன்று திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எல்லாமே சிவா தான் எழுதியிருக்கிறார். ஹோசிமின் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
சுமோ ஆடையில் வந்த கூல் சுரேஷ்
பொதுவாக சின்ன படங்களுக்கு விளம்பரத்தை ஏற்படுத்த வித்தியாசமான காஸ்டியூமில் வந்து ப்ரோமோஷ் செய்து வருகிறார் கூல் சுரேஷ். அந்த வகையில் சுமோ படத்தை ப்ரோமோட் செய்ய சுமோ போல் அரைகுறை ஆடையோடு வந்து படம் பார்த்துள்ளார் கூல் சுரேஷ். இதை பார்த்த ரசிகர்கள் என்ன சுமோ ஆடை என்று கோவணத்தை கட்டி வந்திருக்கிறார் என அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் ஒரு படத்தைப் ப்ரோமோட் செய்ய இப்படி அநாகரிகமான ஆடைகளை அணிந்து வரவேண்டுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
Cool Suresh in a unique getup for Sumo! 😎🎥 #SumoMovie #CoolSuresh #Theatre #PolimerNewspic.twitter.com/KR9WmlnSPd
— TamilCineX (@TamilCineX) April 25, 2025





















