“போதை பழக்கத்தில் இருந்து என்னை மீட்டது இந்த கலைதான்” - நடிகர் பானு சந்தர் ஓபன் டாக்
பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பானு சந்தர், போதை பழக்கத்திலிருந்து எப்படி விடுபட்டேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் பானுசந்தர் கல்லூரி காலங்களில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டு இருந்துள்ளார். உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பழக்கத்திலிருந்து எப்படி மீண்டு வந்தது குறித்து தெரிவித்துள்ளார்.
பானு சந்தர்:
பானு சந்தர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இசையமைப்பாளர் மாஸ்டர் வேணுவின் மகனாவார்.
மும்பை வாழ்க்கை:
கல்லூரி படிப்புக்காக மும்பை சென்ற பானு சந்தர், கஞ்சா உள்ளிட்ட பொருட்களுக்கு அடிமையாகியுள்ளார். சுமார் 3 வருடங்கள் மும்பையில் இருந்த பானு சந்தர், போதை பழக்கத்தால் உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக, மும்பைக்கு அவரது தாய் வந்த போது அதிர்ச்சியடைந்துள்ளார். ஏன் உன் முகம் எல்லாம், இப்படி வாடி இருக்கிறது என வருத்தப்பட்டுள்ளார். உடனடியாக மும்பையை விட்டு புறப்படுமாறு தெரிவித்துள்ளார். தேர்வுகள் எல்லாம் இருக்கிறது என தெரிவித்தும் கூட, தாய் வற்புறுத்தலால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
மாறிய வாழ்க்கை:
பின் சொந்த ஊர் சென்றாலும், போதை பழக்கத்தை விடாமல் தொடர்ந்துள்ளார். அவரது சகோதரர், உனக்கு இதை விட பெரிய போதயை காண்பிக்கிறேன் என கூறி, மார்சியல் கலையில் சேர்த்துள்ளார். மார்சியல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவுடன் போதை பழக்கத்தை விட ஆரம்பித்த பானு சந்தர், முற்றிலுமாக நிறுத்திவிட்டார். பின் அருகில் யாரேனும் சிகரெட் பிடித்தாலும் பிடிக்காது என தெரிவிக்கிறார். மார்சியல் கலைதான் தன்னை போதை பழக்கத்திலிருந்து விடுவிக்க உதவியது என தெரிவித்துள்ளார்.
முன்னுதாரணம்:
ரஜினி பற்றி கூறும் பானு சந்தர், பேருந்து நடத்துனராக இருந்து, நடிகராக மாறி எனக்கு முன்னுதாரணமாக இருந்துள்ளார். எதுவும் இல்லாமல் இருந்த ரஜினி உழைப்பை பார்த்து, எல்லாம் இருந்தும், நாம் ஏன் உழைக்க் கூடாது என உழைத்துள்ளேன் என தன்னம்பிக்கையோடு பேசுகிறார்.
பாலு மகேந்திரா பற்றி கூறும் போது, அவர் இருக்கும் செட் அமைதியாக இருக்கும். அவர் செட்டில் அமைதியாக, பொறுமையாக தான் பேசுவார். ஆனால் சில நேரம் மிகவும் கோபமடைந்து விடுவார். அதனால் அவரை பார்த்து எல்லாரும் பயத்துடன் வேலை செய்வார்கள். அஜித் பற்றி கூறும் போது, அவர் அதிகம் பேச மாட்டார், ஆனால் நண்பர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். மற்றவர்கள் எப்படி அஜித்தை பார்க்கிறார்கள் எனக்கு தெரியவில்லை, ஆனால் தங்கமானவர் என்று தெரிவித்துள்ளார்.
70 வயதான பானு சந்தர் காவல்துறை அதிகாரியாக ஒரு படத்தில் வருவதாகவும், தன் உணர்ச்சி குன்றாது, இளைஞர் போன்ற உடல் நலத்துடனும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்
View this post on Instagram