Magamuni | அடுத்த அவார்டுக்கு ரெடியான மகாமுனி... இது ஆர்யா அப்டேட்..
மகாமுனி திரைப்படம் 9 சர்வதேச விருதுகளையும், சிறந்த பிற மொழி திரைப்படத்திற்கான விருதையும் பெற்றுள்ளது.
அருள்நிதி இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மௌனகுரு . இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு செம்படம்பர் 6-ஆம் தேதி மகாமுனி என்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படம் வெளியானது. இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க , இந்துஜா மற்றும் மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.
Very happy to have won the "Best Actor" award for "Magamuni" in the 15th Anniversary of “Ayodhya Film festival” Thank you so much @Santhakumar_Dir sir 🤗🤗🤗😘😘 @MusicThaman @StudioGreen2 @kegvraja pic.twitter.com/shWNnUwHsi
— Arya (@arya_offl) December 5, 2021
இந்தநிலையில், மகாமுனி படத்தில் நடித்ததற்காக நடிகர் ஆர்யாவிற்கு 'சிறந்த நடிகர்' விருதை அயோத்தியா பிலிம் பெஸ்டிவல் வழங்க இருக்கிறது. இதுகுறித்து நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அயோத்தி திரைப்பட விழாவின் 15வது ஆண்டு விழாவில் "மகாமுனி" படத்திற்காக "சிறந்த நடிகர்" விருதை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இதற்கு காரணமாக இருந்த இயக்குனர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன் ஆகியோருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, மகாமுனி திரைப்படம் 9 சர்வதேச விருதுகளையும், சிறந்த பிற மொழி திரைப்படத்திற்கான விருதையும் பெற்றுள்ளது. மேலும் 2 முறை விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
#Magamuni won 9 International awards, 2 Finalist ,1 Nomination for Best Foreign Language Film and 2 official selections So far and still counting. @arya_offl @Actress_Indhuja @Mahima_Nambiar @editorsabu @MusicThaman #santhakumar pic.twitter.com/H4BAsWKvTA
— Santhakumar (@Santhakumar_Dir) June 7, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்