மேலும் அறிய

Leo: நானே ஒரு ஆக்‌ஷன் கிங்... லியோ படத்தில் என் கேரக்டர் இதுதான்.. அர்ஜூன் பேச்சால் எகிறும் எதிர்பார்ப்பு..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் தன்னுடைய கேரக்டர் எப்படியிருக்கும் என்பதை நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் தன்னுடைய கேரக்டர் எப்படியிருக்கும் என்பதை நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார். 

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - தயாரிப்பாளர் லலித் குமார் மீண்டும் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் அர்ஜூன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

மேலும் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி  ஆகியோர் பணியாற்றுகின்றனர். முன்னதாக கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி லியோ படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது. இது படத்தில் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெறவுள்ளதை காட்டும் வண்ணம் இருந்தது. 

தற்சமயம் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் கூட படப்பிடிப்புத் தளத்தில் படக்குழுவினருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்திருந்தார். இதில் நடிகர் விஜய், இயக்குநர் மற்றும் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் இருந்தனர். இது இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் லியோ படத்தில் தன்னுடைய கேரக்டர் எப்படியிருக்கும் என்பதை நடிகர் அர்ஜூன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில், “லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறேன். அவர் இயக்கிய கைதி மற்றும் விக்ரம் படங்களை பார்த்துள்ளேன். ரொம்ப வித்தியாசமா கதையை சொல்லக்கூடிய ஒரு இயக்குநர். அந்த படத்துல நான் நடிக்கிறேன் சொல்றப்ப பெருமையா தான் இருக்குது. அதேபோல் நான் விஜய் கூட இதுவரை நடிச்சது இல்ல. இந்த படத்துல நடிக்கிறது ஆர்வமா இருக்குது. அதேபோல் கதையும் வித்தியாசமான கதையாக அமைந்துள்ளது. 

எனக்கு மக்கள் கொடுத்த ஆக்‌ஷன் கிங் டைட்டில் பற்றி உங்களுக்கு நல்லா தெரியும். அந்த மாதிரி தான் லோகேஷ் ரசிகர்கள் கிட்ட என்னை காட்டப் போறாரு. என்ன வித்தியாசம்னா மக்கள் இதுவரை என்னைப் பார்க்காத கேரக்டருல பார்ப்பாங்க” என அர்ஜூன் தெரிவித்துள்ளார். இதனால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Embed widget