மேலும் அறிய
Advertisement
Nelson DhilipKumar: நெக்ஸ்ட் விஜய் இல்லை.. அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் நெல்சன்.. ஆச்சரியத்தில் கோலிவுட்
Nelson: டோலிவுட்டில் அல்லு அர்ஜூனை வைத்து நெல்சன் படம் இயக்க உள்ளதாகவும், ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் அந்த படம் பிரமாண்டமாக எடுக்க உள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
Nelson: கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாரை வைத்து கலக்கிய நெல்சன் அடுத்ததாக டோலிவுட்டில் அல்லு அர்ஜூன் உடன் கூட்டணி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான நெல்சன், நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்டார். நயன்தாராவை அமைதியான பெண்ணாக காட்டி போதைப்பொருள் கடத்தும் கும்பலை அழிக்கும் நெல்சனின் இயக்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார்.
பெரிதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும் விஜய்யின் பீஸ்ட் படம் ரசிகர்களை திருப்தி படுத்தாமல் தோல்வியடைந்தது. நெல்சனிற்கு எதிராக நெகட்டிவ் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து இயக்கத்தில் கவனம் செலுத்திய நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார். இதில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் ஸ்டார்களை களமிறங்கி ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்த நெல்சன் ஜெயிலரை கொண்டாட வைத்தார். படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலானது. ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக நெல்சனுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான சொகுசு காரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பரிசாக கொடுத்தது.
ஜெயிலருக்கு பிறகு மீண்டும் நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் அதில் விஜய் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. தற்போது தளபதி 68 படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், மீண்டும் நெல்சன், விஜய் காம்போ குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கோலிவுட்டில் கலக்கிய நெல்சன், டோலிவுட் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். டோலிவுட்டில் அல்லு அர்ஜூனை வைத்து நெல்சன் படம் இயக்க உள்ளதாகவும், ரூ.200 கோடி பட்ஜெட்டில் படம் அந்த படம் பிரமாண்டமாக எடுக்க உள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இந்த படம் அல்லு அர்ஜூனின் 23வது படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. தற்போது அல்லு அர்ஜூன் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் விறு, விறுப்பாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நெல்சன் உடனான கூட்டணி குறித்த அப்டேட் வெளியாகலாம்.
மேலும் படிக்க: Uriyadi Vijay: இயக்குநருக்காக மேடையில் கண்கலங்கிய ‘உறியடி’ விஜய்குமார்.. நம்பிக்கை தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion